அனுஷ்கா பிறந்தநாள்.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு.. மேடம் செம கெத்து போங்க

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படு ஃபேமஸாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருந்த அவர் சில வருடங்கள் கோலிவுட்டையும், டோலிவுட்டையும் சேர்த்தே ரூல் செய்துகொண்டிருந்தார். ஆனால் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் அவர் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

யோகா டீச்சரான அனுஷ்கா நாகார்ஜுனா நடித்த சூப்பர் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். கிளாமர், திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக அந்த படத்தில் வலம் வந்த அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் நடித்த படங்களில் அருந்ததி படம் மெகா ஹிட்டானது. பேய் கதை ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்துப்போனார்கள். இதனால் ஃபேமஸ் ஆக ஆரம்பித்துவிட்டார்.

anushka tamil cinema kollywood

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அனுஷ்காவின் அலை கோலிவுட்டிலும் அடிக்க ஆரம்பித்தது. அதன்படி வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்தார். முக்கியமாக பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அனுஷ்காவின் கரியர் மேற்கொண்டு உச்சம் சென்றது.

இஞ்சி இடுப்பழகி: அப்படி உச்சத்தில் இருக்கும்போதுதான் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டினார். படம் படுதோல்வியடைந்தது. மேலும் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் தடுமாறினார் அனு. இதன் காரணமாக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போனார். இருந்தாலும் அனுஷ்கா மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது.

காதல்?: இதற்கிடையே பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக், பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்தார் அனுஷ்கா. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி; இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்களுக்குள்ளான காதலில் பிரபாஸ் தரப்பிலிருந்து சில பிரச்னைகள் வந்ததாகவும்; அதன் காரணமாகத்தான் கடும் மன உளைச்சலாகி சினிமாவில் அனுஷ்காவால் கவனம் செலுத்த முடியவில்லை என்ற பேச்சும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்: சூழல் இப்படி இருக்க அனுஷ்கா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸஸ் பொலிஷெட்டி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர்; இப்போது கிரிஷ் இயக்கத்தில் காட்டி படத்தில் நடித்துவருகிறார். இது ஹீரோயினை மையப்படுத்திய படமாக உருவாகிவருகிறது. இது தவிர்த்து மலையாளத்தில் காத்தனார் என்ற படத்திலும் நடித்து மல்லுவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.

அனுஷ்கா சொத்து மதிப்பு: இந்நிலையில் இன்று அவர் தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி காட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. சூழல் இப்படி இருக்க அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு ஆறு கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவருக்கு மொத்தம் 130 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருக்குமென்றும்; தான் சம்பாதித்த பணத்தை சில தொழில்களில் முதலீடு செய்திருக்கும் அவர்; அதன் மூலமும் ஏகப்பட்ட வருமானத்தை ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X