Trisha - அடேங்கப்பா இத்தனை சொகுசு பங்களாவா?..திரிஷாவின் சொத்து மதிப்பு தெரியுமா?..சைலெண்ட் சம்பவம்னா இதுதான்
சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் கைகளில் இப்போது விடாமுயற்சி, தக் லைஃப், கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் கைகளில் உள்ளன. அதேபோல் ஹிந்தியிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாகவும் புதிய தகவல் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சைலெண்ட் சம்பவம்னா இதுதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
மிஸ் சென்னை பட்டம் வென்று பிரபலமானவர் திரிஷா. அதன் பிறகு ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் தலை காண்பித்த அவருக்கு லேசா லேசா படத்தின் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே மௌனம் பேசியதே படத்தில் நடித்து அந்தப் படம் ரிலீஸாகிவிட்டது. இதன் காரணமாக மௌனம் பேசியதே படம் அவருடைய முதல் படம் என்று கருதப்படுகிறது. அப்படத்திலேயே திரிஷாவின் அழகு, நடிப்பு ஆகியவை ரசிகர்களையும் கோலிவுட்டினைரையும் கவர்ந்தன.

முன்னணி நடிகை: மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஆரம்பத்தில் ரஜினி, கமலுடன் நடிக்காமல் இருந்த அவருக்கு மன்மதன் அம்பு, தூங்கா வனம், பேட்ட ஆகிய படங்களின் மூலம் அதனையும் நிறைவேற்றிக்கொண்டார். பப்ளி நடிகைகளைத்தான் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற பிம்பத்தை திரிஷா அடித்து நொறுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்கள்: கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகை என்ற இடத்தில் இருக்கிறார் அவர். இடையில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தாலும் 96 மூலம் எழுந்துவிட்ட அவர் இப்போது மீண்டும் லைம் லைட்டில் இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், ராங்கி, லியோ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. படங்கள் அப்படி இப்படியான விமர்சனங்களை பெற்றாலும் திரிஷாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. இதன் காரணமாக அவருக்கு மேற்கொண்டு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
பிஸி திரிஷா: அதன்படி அஜித்துடன் விடாமுயற்சி, கமல் ஹாசனுடன் தக் லைஃப் ஆகிய படங்களில் நடிக்கும் அவர் கௌரவ் நாராயணன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர்; ஹிந்தியிலும் மீண்டும் எண்ட்ரி கொடுக்கவிருப்பதாகவும் அந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோ என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாராவுக்கும் தற்போது வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருக்கின்றன. இதனை பயன்படுத்திக்கொள்ள திரிஷா முழு மூச்சாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
திரிஷாவின் சம்பளம்: திரிஷா இப்போது 5 கோடி ரூபாயிலிருந்து ஏழு கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படமும், தக் லைஃப் படமும் ஹிட்டாகும்பட்சத்தில் கண்டிப்பாக திரிஷாவின் சம்பளம் பத்து கோடி ரூபாயை தொடும் என்பதை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி விளம்பர படங்களில் நடிப்பதன் மூலமும் திரிஷா பத்து கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டுகிறாராம். இந்தச் சூழலில் திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சொத்து மதிப்பு: அதன்படி, அவருக்கு சென்னையில் ஒரு பிரமாண்ட சொகுசு பங்களாவும், ஹைதராபாத்தில் ஒரு சொகுசு பங்களாவும் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் சென்னையில் இருக்கும் பங்களாவின் மதிப்பு ஏழு கோடி ரூபாய் என்றும்; ஹைதராபாத்தில் இருக்கும் பங்களாவின் மதிப்பு ஆறு கோடி ரூபாய் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. அதேபோல் வேறு சில தொழில்களையும் செய்துவரும் அவருக்கு அதன் மூலமும் கோடி கோடியாக வருமானம் வருகிறதாம். அவர் BMW Regal (ஐந்து கோடி ரூபாய்), Benz S Class (80 லட்சம் ரூபாய்), BMW 5 Series (75 லட்சம் ரூபாய்) உள்ளிட்ட சொகுசு கார்களை பயன்படுத்துவதாகவும்; மொத்த சொத்து மதிப்பு நூறு கோடியிலிருந்து 110 கோடி ரூபாய்வரை இருக்கும் என்றும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











