அடேங்கப்பா வனிதா விஜயகுமார் செய்யும் தொழில் இதுவா?.. எவ்வளவு வருமானம் தெரியுமா?

சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். இந்த சூழலில் வனிதா விஜயகுமார் செய்துவரும் தொழில் குறித்து தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

 Here are the Details about Vanitha Vijayakumar Business

பிக்பாஸ் வனிதா: இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

வசந்தபாலனின் அநீதி: அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஷயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக வனிதா விஜயகுமாரின் நடிப்புக்கும் ரசிகர்களிடையே டீசண்ட்டான வரவேற்பே கிடைத்தது. மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வனிதாவின் திருமணம்: இதற்கிடையே வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

வனிதாவின் தொழில்: இந்நிலையில் வனிதா விஜயகுமார் செய்துவரும் தொழில் குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஃபேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்திருக்கும் அவர் விவி ஸ்டைலிஷ் என்ற என ஃபேஷன் கடை ஒன்றை நடத்திவருகிறார். அதன் மூலம் அவருக்கு லட்சங்களில் வருமானம் கிடைத்துவருகிறதாம். இதற்கு முன்னதாக தன்னுடைய ப்ரீத்தா நடித்த படங்களுக்கும் இயக்குநர் பி.வாசு இயக்கிய சில படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X