திருட்டுத்தனமாக அதை செய்வேன்.. கமல் மகள் ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
சென்னை: கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியானது. நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகி, இசை கலைஞராகவும் ஜொலிக்கும் ஸ்ருதி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.
கடைசியாக நடித்த படம்: தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும் லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார்.
ஸ்ருதி ஹாசன் பேட்டி: இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆனால் எனது அப்பாவுக்கோ கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததன் காரணமாக எங்களால் கோயிலுக்கு செல்ல முடியாமல் இருந்தது. அதனால் திருட்டுத்தனமாக அப்பாவுக்கு தெரியாமல் கோயிலுக்கு செல்வேன். அடிக்கடி தேவாலயத்துக்கும் செல்வேன். ரொம்ப நாட்களுக்கு நான் இப்படி செய்வது அப்பாவுக்கு தெரியாது. தாத்தாவுடன் சென்றாலும் அப்பாவிடம் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடுவேன்.
கடவுள் நம்பிக்கைதான்: நான் இன்று தைரியமாகவும், இந்த நிலைமையில் இருப்பதற்கும் காரணம் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கைதான். ஆனால் அது அப்பாவுக்கு பிடிக்காது. அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருந்தார். நான் வளரும்போது கடவுளின் சக்தியை நானே கண்டுபிடித்து பிறகு புரிந்துகொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











