அனுஷ்காவுக்கு திருமணம்?.. தொடங்கிய வேலைகள்?.. யார் மாப்பிள்ளை தெரியுமா?.. கிட்டத்தட்ட உறுதியாம்

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படு ஃபேமஸாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருந்த அவர் சில வருடங்கள் கோலிவுட்டையும், டோலிவுட்டையும் சேர்த்தே ரூல் செய்துகொண்டிருந்தார். ஆனால் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில்; அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும்; அதற்கான வேலைகளை குடும்பத்தினர் தொடங்கிவிட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யோகா டீச்சரான அனுஷ்கா நாகார்ஜுனா நடித்த சூப்பர் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். கிளாமர், திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக அந்த படத்தில் வலம் வந்த அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் நடித்த படங்களில் அருந்ததி படம் மெகா ஹிட்டானது. பேய் கதை ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்துப்போனார்கள். இதனால் ஃபேமஸ் ஆக ஆரம்பித்துவிட்டார்.

anushka shetty tamil cinema

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அனுஷ்காவின் அலை கோலிவுட்டிலும் அடிக்க ஆரம்பித்தது. அதன்படி வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்தார். முக்கியமாக பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அனுஷ்காவின் கரியர் மேற்கொண்டு உச்சம் சென்றது.

இஞ்சி இடுப்பழகி: அப்படி உச்சத்தில் இருக்கும்போதுதான் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டினார். படம் படுதோல்வியடைந்தது. மேலும் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் தடுமாறினார் அனு. இதன் காரணமாக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போனார். இருந்தாலும் அனுஷ்கா மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது.

காதல்?: இதற்கிடையே பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக், பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்தார் அனுஷ்கா. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி; இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்களுக்குள்ளான காதலில் பிரபாஸ் தரப்பிலிருந்து சில பிரச்னைகள் வந்ததாகவும்; அதன் காரணமாகத்தான் கடும் மன உளைச்சலாகி சினிமாவில் அனுஷ்காவால் கவனம் செலுத்த முடியவில்லை என்ற பேச்சும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்: சூழல் இப்படி இருக்க அனுஷ்கா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸஸ் பொலிஷெட்டி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர்; இப்போது கிரிஷ் இயக்கத்தில் காட்டி படத்தில் நடித்துவருகிறார். இது ஹீரோயினை மையப்படுத்திய படமாக உருவாகிவருகிறது. இது தவிர்த்து மலையாளத்தில் காத்தனார் என்ற படத்திலும் நடித்து மல்லுவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அனுஷ்கா. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கல்.

திருமணம்: இந்நிலையில் அனுஷ்காவுக்கு 42 வயது ஆகிறது. ஆனாலும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இப்போது அவரது திருமணம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும்; அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகவும்; கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள அனுஷ்காவும் ஒத்துக்கொண்டார் என்று தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X