பாலிவுட் போனதும் ஆளே மாறிட்டாரா கீர்த்தி சுரேஷ்?.. லிப் லாக் அடிக்கப்போகிறாரா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் அவர் நடிக்கும் ஹிந்தி படமான பேபி ஜான் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி நடிகர்களுடன்: அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்தார். தமிழில் அவர் கமர்ஷியல் படங்கள் நடித்தாலும் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்றார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு வரவில்லை.
சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: இதற்கிடையே தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவருக்கு மாமன்னன் திரைப்படம் மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்தது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு சைரன் படத்தில் நடித்த அவருக்கு தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் ஹிந்தி தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.
பாலிவுட் என்ட்ரி: மேலும் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்திலும் நடித்துவருகிறார் அவர். அந்தப் படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் லிப் லாக் காட்சியில் நடிக்கவிருக்கிறார் என்றும்; முதலில் தயங்கிய அவர் பாலிவுட்டில் இதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது என்று நெருங்கியவர்கள் கூறிய அட்வைஸை ஏற்று ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











