Thug Life - தக் லைஃப்.. மூன்று கோடி ரூபாயை வேண்டாம் என்றாரா ஐஸ்வர்யா லட்சுமி?

சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை. எனவே அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்.

Here are the New details about Thug Life Movie And Aishwarya Lakshmi

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் கமல் ஹாசன் வித்தியாசமான கெட் அப்பில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று படங்களை விட்டுகொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி: இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரம் தனக்கு பெரும் திருப்புமுனையை தரும் நம்பிக்கையை பலமாக கொண்டிருக்கிறாராம். எப்படி என்றால் கட்டா குஸ்தி படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு மூன்று படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கோடி ரூபாய்வரை சம்பளம் தருவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார்களாம். ஆனால் மூன்று கோடிக்காக கமல் - மணிரத்னத்தின் க்ளாசிக் கூட்டணியை மிஸ் செய்ய விரும்பாத ஐஸ்வர்யா இதில் கமிட்டாகிவிட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X