Vidaamuyarchi - தாமதப்படுத்தும் படக்குழு.. விடாமுயற்சிக்கு நோ சொல்லும் திரிஷா?.. களத்தில் இறங்கிய அஜித்?

சென்னை: விடாமுயற்சி படத்துடைய ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அதில் அஜித், திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்துவருவதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட ஷுட்டிங்கிற்கான லொகேஷன் தேடும் பணியும் நடந்துவருகிறது. இந்த சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதோடு சரி; படத்திலிருந்து வேறு எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Here are the New Details about Vidaamuyarchi Movie And Trisha

அஜர்பைஜான் ஷூட்டிங்: அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்தது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்தனர். மங்காத்தா படத்துக்கு பிறகு அஜித் - திரிஷா - அர்ஜுன் கூட்டணி இதில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். படத்தின் ஷூட்டிங்கின்போது மிலனின் உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

முதல் ஷெட்யூல் ஓவர்: அஜித் அஜர்பைஜானிலிருந்து சென்னை வந்து மீண்டும் அங்கு சென்று நடித்துக்கொடுத்தார். ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொகேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு காரணம்; எக்கச்சக்க செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிய காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

அடுத்தது எங்கே: தற்போது படக்குழு சென்னையில் இருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் துனுஷியாவில் நடக்கலாம் என்றும் தெரிகிறது. அஜர்பைஜானில் சொதப்பியது போல் துனிஷியாவில் சொதப்பக்கூடாது என்று மகிழ் திருமேனியிடம் லைகா தரப்பு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்க அஜித் ரசிகர்களோ விடாமுயற்சி அப்டேட் கேட்டு போராடவும் செய்தனர். சில நாட்களுக்கு முன்புகூட புதுச்சேரியில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நோ சொல்லும் திரிஷா: நிலைமை இப்படி இருக்க படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்தின் அடுத்த ஷெட்யூல் தொடங்க மேலும் தாமதம் ஆகும் சூழல் நிலவுகிறதாம். இதனால் திரிஷாவுக்கு கால்ஷீட் இடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் கமலுடன் தக் லைஃப் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறார். அதுதவிர்த்து சிரஞ்சீவியுடனும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் அவர் விடாமுயற்சி படத்துக்கும் தேதி கொடுத்தார்.

ஆனால் அவர் கொடுத்த தேதிகளுக்கு அவருக்கான போர்ஷனை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. எனவே இப்போதைக்கு தக் லைஃப், விஸ்வம்பரா படத்துக்கான தேதிகள் மட்டுமே திரிஷாவிடம் இருப்பதால்; விடாமுயற்சியின் அடுத்த ஷெட்யூலுக்கு தன்னால் வர முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் அஜித்தே நேரடியாக களமிறங்கி திரிஷாவிடம் பேசியதாகவும்; அதனையடுத்து தக் லைஃப், விஸ்வம்பரா படத்தின் தேதிகளுக்குள் அட்ஜெஸ்ட் செய்து விடாமுயற்சியின் அடுத்த ஷெட்யூலுக்கு அவர் வர ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X