பஞ்சாயத்து முற்றிவிட்டதா?.. சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்குவதில்லையா ஜோதிகா?
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். அதேசமயம் ஜோதிகாவுக்கும் சூர்யாவின் குடும்பத்தினருக்கும் கடந்த சில காலமாகவே பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்பட்ட சூழலில்; இப்போது புது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். ஜோதிகா கடைசியாக ஸ்ரீகாந்த் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக ஜோதிகா சொன்னதுபோல் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சூர்யா தனது முழு ஆதரவையும் கொடுத்துவருகிறார். மும்பையில் தற்போது இருவரும் தங்களது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள்.
வீட்டில் தங்குவதில்லையா?: இந்நிலையில் ஜோதிகா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சூர்யா சென்னையில் பிரமாண்டமாக பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார். அதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கூட்டு குடும்பமாக வாழ திட்டமிட்டிருந்ததாகவும்; அந்த சமயத்தில்தான் சூர்யாவும், ஜோதிகாவும் மும்பைக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் ஜோதிகா அவ்வப்போது மும்பையிலிருந்து சென்னை வருவதாகவும்; அப்படி வரும்போதுகூட வீட்டில் தங்காமல் ஹோட்டலில் ரூம் புக் செய்து தங்குகிறார் என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் கேட்கின்றன. இது சூர்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











