எனக்கும் சூர்யாவுக்கும் டைவர்ஸ் நடக்குமா?.. உச்சக்கட்ட கடுப்பான ஜோதிகா.. சீக்ரெட் சொன்ன ஜோதிடர்

சென்னை: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் மலர்ந்தது. பிறகு பல வருட காத்திருப்புக்கு பிறகு சூர்யாவின் வீட்டில் சம்மதம் கிடைத்தது. எனவே இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். தேவ், தியா என்ற குழந்தைகள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்று புகழப்படும் அவர்களுக்குள் சமீபமாக சண்டை என்று சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் வடிகட்டிய பொய் என்பது பின்னர் தெரிந்தது.

சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தார். அதில் ஜோதிகா ஹீரோயின். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. ஆனால் அந்தக் காதலுக்கு சூர்யாவின் தந்தையான சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டு சம்மதத்துக்காக பொறுமையாக காத்திருந்தார்கள். அவர்களின் பொறுமைக்கு பலன் கிடைக்கும்படியாக; இந்த திருமணத்துக்கு சிவகுமார் ஒத்துக்கொண்டார்.

Suriya Jothika Kanguva

சூப்பர் வாழ்க்கை: பிறகு இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது. தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பின் இருவரும் தங்களது வாழ்க்கையை மிக சிறப்பாக நகர்த்திவருகிறார்கள். ஜோதிகாவும் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி குழந்தைகள், குடும்பத்தை பார்த்துவந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஹிந்தியில் அவர் கடைசியாக ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

பிரச்னையா?: சூர்யாவும் பிஸியாக நடித்துவருகிறார். ஹிந்தியில் அவர் கால் பதிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சிவக்குமாருக்கும் ஜோதிகாவுக்கும் பிரச்னை. அதனால் சூர்யாவை பிரிய வேண்டும் இல்லை என்றால் தனிக்குடுத்தனம் செல்ல வேண்டுமென்று ஜோ கூறியதாக இஷ்டத்துக்கு பேசினார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்பதை சூர்யாவும், ஜோதிகாவும் தொடர்ந்து உணர்த்திக்கொண்டே வருகிறார்கள். அதுமட்டுமின்றி சிவக்குமார் மீது அளவு கடந்த பாசம், மரியாதை வைத்திருக்கிறார் ஜோதிகா.

ட்ரெண்டான புகைப்படங்கள்: இப்போது இரண்டு பேருமே மும்பையில் செட்டிலாகிவிட்டார்கள். அவ்வப்போது சென்னை வரும் அவர்கள் சமீப காலமாக கோயில் கோயிலாக சுற்றுகிறார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. மேலும் கங்குவா படத்துக்கு ஒரு பிரச்னை வந்தபோது பொங்கி எழுந்து போஸ்ட் போட்டிருந்தார் ஜோ. ஆனால் அந்த விவகாரத்தில் ஜோதிகாவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடர் பேட்டி: இந்நிலையி ஜோதிட Mehro தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "ஜோதிகா வளர்ந்துவந்த சமயத்தில் சூர்யாவை காதலித்தார். அப்போது என்னிடம் வந்து நான் ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டார். அதற்கு நானோ செய்துகொள்ளலாம் ஆனால் விவாகரத்து நடக்கும் என்று சொன்னேன். உடனே அவர் டென்ஷனாகிவிட்டார். அதனையடுத்து ஒரு படத்தின் ஸ்பெஷல் காட்சியில் ஜோதிகா என்னை பார்த்தார். ஆனால் என்னிடம் பேசவே இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X