கீர்த்தி சுரேஷ் காதலர் ஆண்டனி.. சென்னையில் எத்தனை கம்பெனி இருக்கு தெரியுமா?.. வெயிட் பார்ட்டிதான்
சென்னை: தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் அவர் நடித்திருக்கிறார். படத்திலிருந்து ஒரு பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் இதுவரை இல்லாத அளவு கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி காண்பித்திருந்தார். சூழல் இப்படி இருக்க அவர் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை மிக விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த வெற்றியின் காரணமாக அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை அடைந்தார். இருப்பினும் தமிழில் அவருக்கு இடையில் சறுக்கல் ஏற்பட்டது. ஆனாலும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் அவர் கவனம் செலுத்தினார்.

தேசிய விருது: அந்தவகையில் தெலுங்கில் அவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அப்படத்தில் அப்படியே சாவித்திரியாகவே மாறியிருந்தார் கீர்த்தி. இதன் காரணமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது. தேசிய விருது பெற்ற பிறகும் அவருக்கான வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் தான் கொஞ்சம் அப்செட் ஆனதாக சில பேட்டிகளில் கீர்த்தி சுரேஷே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பிஸி: சூழல் இப்படி இருக்க தமிழில் அவருக்கு மாமன்னன் திரைப்படம் தரமான ரீ என்ட்ரியை கொடுத்தது.அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து கோலிவுட்டில் அவர் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியானது. அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா, ஹிந்தியில் பேபி ஜான் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. பேபி ஜான் திரைப்படம் தமிழில் வெளியாகி ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக் ஆகும்.
கவர்ச்சியில் தாராளம்: கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை தமிழில் பெரிதாக கிளாமர் காட்டாதவர். ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்தே ஸ்கோர் செய்தார். ஆனால் பேபி ஜான் படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருந்தார். சமீபத்தில் அந்தப் படத்திலிருந்து வெளியான ஒரு பாடலின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக் அடைந்தனர். ஏனெனில் இதுவரை காட்டாத கிளாமரை அந்தப் பாடலில் அவர் காட்டியிருந்தார். இதற்கிடையே கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டன.
காதலரை அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்: இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. அநேகமாக டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அவரது திருமணம் கோவாவில் நடக்கலாம் என்று பேச்சுக்கள் எழுந்தன. சூழல் இப்படி இருக்க இன்று அவர் தனது காதலர் ஆண்டனி தட்டிலை அறிமுகப்படுத்தி வைத்து; 15 வருட காதல் என்று குறிப்பிட்டிருந்தார். கீர்த்தி பள்ளியில் படிக்கும்போதிருந்தே ஆண்டனியை காதலித்துவருகிறாராம். இத்தனை வருட காதலையா கீர்த்தி இவ்வளவு நாட்கள் மறைத்து வைத்திருந்தார் என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.
சென்னையில் கெத்து: தற்போது அந்த ஆண்டனி தட்டில் யார் என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது அவர் துபாயில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தவருகிறார். மேலும் அவரது குடும்பத்தினர் பாஜகவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு துபாயில் மட்டும் தொழில்கள் இல்லையாம். சென்னையிலும் அவருக்கு இரண்டு கம்பெனிகள் இருப்பதாகவும்; ஆனால் தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் வெளியில் தெரியாதபடி ஆண்டனி பார்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. அவர் அடிப்படையில் ஒரு பொறியாளர் என்றும்; கொச்சியில் ஏகப்பட்ட ரெஸ்டாரண்ட்களை நடத்திவருவதாகவும்; பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் அவருக்கு சொத்து குவிந்திருப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











