Sneha - விஜய் மாதிரி பண்ணனுமா.. அப்போ இதை செய்.. பிரசன்னாவிடம் கண்டிஷன் போட்ட சினேகா

சென்னை: நடிகை சினேகா கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்டவர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சினேகாவுக்குத்தான் இந்தப் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கவிருக்கிறார்.

நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார். இதனால் குறுகிய காலத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் சினேகா. அழகான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவருக்கு வரிசையான வாய்ப்புகளை கொடுத்தன.

Here are the Unknown Details about Sneha And Prasanna

முன்னணி நடிகை: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது. தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.

புன்னகை அரசி: சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டம் சினேகாவுக்குத்தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.

திருமணம்: கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதல் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட சினேகா தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருந்துவருகிறார்.

கண்டிஷன் போட்ட சினேகா: இதற்கிடையே சினேகாலயா என்ற துணி கடையையும் அவர் தொடங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் பிரசன்னாவுக்கு சினேகா கண்டிஷன் போட்டதாக கூறியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து அளித்த பழைய பேட்டி ஒன்றில், "எங்களுக்கு திருமணம் ஆன புதிதில் வெளிநாடு ஒன்றுக்கு ஹனிமூன் போயிருந்தோம். அப்போது குஷி படத்தில் விஜய் சார் காலில் கயிறை கட்டிக்கொண்டு Bungee Jumping செய்வாரே அதை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

உடனே நான் கூடவே சினேகாவையும் அழைத்தேன். ஆனால் அவரோ வர முடியாது என்று சொல்லிவிட்டார். அதனையடுத்து அவரிடம் நான், நீ வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், என்னுடைய பெயரை நீ உன் உடலில் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். உடனடியாக நானும் அப்படியே செய்துகொண்டேன். பிறகுதான் அவர் அந்த Bungee Jumping வந்தார்" என்றார் பிரசன்னா.

GOAT ரீ என்ட்ரி: முன்னதாக, சினேகா மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரம் சினேகாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது படத்தில் வரும் தந்தை விஜய்க்கு சினேகாதான் ஜோடி என்று கூறப்படுகிறது. விஜய்யும், சினேகாவும் இணைந்து ஏற்கனவே வசீகரா என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து நடிப்பதால் இந்த ஜோடியை ஸ்க்ரீனில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X