Taapsee - ஆடுகளத்தில் கலக்கிய டாப்ஸி.. இத்தனை தொழில்கள் செய்கிறாரா?.. வருமானம் கொட்டுமே
மும்பை: Taapsee Birthday (டாப்ஸி பிறந்தநாள்) நடிகை டாப்ஸி சினிமா தவிர்த்து செய்துவரும் தொழில்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ஆடுகளம். ஐந்துக்கும் அதிகமான தேசிய விருதுகளை பெற்ற அந்தப் படத்தின் மூலம்தான் டாப்சி சினிமாவில் அறிமுகமானார். முதலில் த்ரிஷாதான் அந்த கதாபாத்திரத்திற்கு புக் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ காரணத்தால் அவர் விலகிவிட டாப்சி உள்ளே வந்தார். படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார்.

டாப்சியின் கிராஃப்: ஆடுகளம் படத்துக்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் டாப்சிக்கு பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக எதுவும் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த டாப்சி: சூழல் இப்படி இருக்க ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார் டாப்சி. பேபி என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான அவருக்கு பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம்தான் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆனது. பிங்க் படத்துக்கு பிறகு ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன.

பயோபிக்கில் கலக்கிய டாப்சி: அவரது ஹிந்தி கரியரில் பிங்க் படத்துக்கு பிறகு அவருக்கு பெயர் பெற்று தந்த படமாக அமைந்தது சபாஷ் மிது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அவர் தற்போது டன்கி படத்தில் நடித்துவருகிறார். அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கவிருக்கிறது.
அடுத்த படம்: இந்தப் படம் தவிர்த்து பிர் ஆயி ஹஸீன் தில்ரூபா என்ற படத்திலும் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் டாப்சி இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் சினிமாவைத் தவிர்த்து என்ன தொழில் செய்துவருகிறார் என்பதை இதில் பார்க்கலாம்.
என்ன தொழில்: மும்பையில் சொந்தமாக வீடு வாங்கியிருக்கும் டாப்ஸி தனது சகோதரருடன் இணைந்து திருமண ஏற்பாடுகள் செய்துகொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறாராம். அவரது நிறுவனம் சிறந்தும் விளங்குகிறதாம். அதுதவிர ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றையும் அவர் நட்த்திவருவதாக கூறப்படுகிறது. மேலும் கே.ஆர்.ஐ எண்ட்டெர்டெயின்மெண்ட்டோடு சேர்ந்து புனே 7 ஏசஸ் என்ற பேட்மிண்டன் அணியின் உரிமையாளராகவும் அவர் இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











