என்னடா இது கொடுமை.. விக்னேஷ் சிவன் படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: Nayanthara (நயன்தாரா) பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்தில் நயன்தாராவுக்கான ரோல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இதுவரை நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

இவற்றில் நானும் ரௌடிதான் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவர் அனைவராலும் அறியப்படும் இயக்குநராக மாறினார். டார்க் காமெடி ஜானரில் வெளியான அந்தப் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது.
நயனுடன் காதல்: நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பணியாற்றும்போதுதான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்கள் லிவிங் டூ கெதராக இருந்தவர்கள் கடந்த ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
ஏகே 62விலிருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்: திருமணம் முடிந்த கையோடு, அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி லைகாவுக்கு பிடிக்காமல் போக அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன்.
விக்கியின் அடுத்த படம்: ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியது கோலிவுட்டில் பெரிய பேசுபொருளாகவே மாறியது. ஆனால் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது அடுத்த படத்துக்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக களமிறங்கினார். அதன்படி விக்கி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார்.
சென்சேஷனல் பிரதீப்: கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இரண்டாவது படமாக லவ் டுடே படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்படிப்பட்ட சூழலில் அவரை தனது படத்தின் ஹீரோவாக ஃபிக்ஸ் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
நயனுக்கு என்ன ரோல்: இந்தப் படத்தில் கண்டிப்பாக நயன்தாரா நடிப்பார் என்று கருதப்பட்டது. அதேசமயம் ஹீரோயினாக நடிக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் படத்தில் நயன்தாரா என்ன ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்கவிருக்கிறாராம்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கணவர் இயக்கும் படத்தில் நயன் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்த்தால் அக்காவாக நடிக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ஏற்கனவே அவர் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











