தனிமை போதும்.. வீட்டில் கொடுக்கும் அழுத்தம்?.. 2ஆவது திருமணத்துக்கு சமந்தா தயார்?.. மாப்பிள்ளை இவரா?

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தச் சூழலில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வீட்டில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

Here is the Details about Samantha Second Marriage

பிஸியான சமந்தா: திருமண முறிவுக்கு பிறகு தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவந்தார் சமந்தா. அந்தவகையில் தமிழில் அவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்தப் பாடலில் நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டானார் சமந்தா.

மையோசிடிஸ்: சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மையோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார்.

சிட்டாடல் வெப் சீரிஸ்: அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் மட்டும் அவர் நடிக்கிறார். ராஜ் & டிகே இயக்கும் அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது. அதில் சமந்தாவும் கலந்துகொண்டிருக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் அவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன. அநேகமாக ஹிந்தி படம் ஒன்றில் அவர் தரமான ரீ எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோ திருமணம்: சமந்தாவின் ப்ரொபஷ்னல் வாழ்க்கை சீராக ஆரம்பித்தாலும் அவரது பெர்சனல் வாழ்க்கை குறித்த கவலை அவரது ரசிகர்களுக்கும், வீட்டார்களுக்கும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புகூட சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ்வாக பேசிக்கொண்டிருந்தார் சாம். அப்போது ரசிகர் ஒருவர், இரண்டாவது திருமணம் எப்போது என்று கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அவர், தோல்வியில் முடியும் முதல் திருமணங்களின் எண்ணிக்கையைவிட இரண்டாவது திருமணங்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரத்துடன் தெரிவித்திருந்தார்.

மீண்டும் திருமணம்?: இந்நிலையில் சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சமந்தா தனிமையில் சிங்கிளாக இருந்தது போதும்; இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது வீட்டில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளியில் மாப்பிள்ளை தேடும் வேலையே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கும் அவரது குடும்பத்தினர் தங்களது நெருங்கிய உறவினர் பையன் ஒருவரையே சமந்தாவுக்கு மாப்பிள்ளையாக்கும் வேலைகளில் தற்போது மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள் என்றும் திரைத்துறையில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X