Shruthi Haasan Net Worth - ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. யப்பா வேற லெவல்

சென்னை: உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக மட்டுமின்றி நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Here is the Details about Shruthi Haasan Net Worth

3 ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

சலார்: தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.

ஹாலிவுட் வாய்ப்பு: இந்தப் படத்துக்கு பிறகு மேலும் சில படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர், ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் 'சென்னை ஸ்டோரி' படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் அவர். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அந்தப் படத்தில் சமந்தா நடிக்கவிருந்தார். ஆனால் உடல்நல பிரச்னையால் அந்தப் படத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார்.

ஸ்ருதி பிறந்தநாள்: இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்த சூழலில் ஸ்ருதி ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

சொத்து மதிப்பு: அதன்படி ஸ்ருதி ஹாசனின் தந்தையான கமல் ஹாசன் சேர்த்து வைத்திருக்கும் சொத்தே பல நூறு கோடிகளுக்கு இருக்குமாம். அந்த சொத்தில் குறிப்பிட்ட அளவு ஸ்ருதி பெயரில் அவர் எழுதி வைத்திருக்கிறாராம். அவை தவிர்த்து ஸ்ருதி ஹாசன் தனியாக சம்பாதிக்க ஆரம்பித்து மொத்தம் 80லிருந்து 90 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். மேலும் மும்பையில் ஒரு சொகுசு பங்களா ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கும் அவர், ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்ஸில் முதலீடு செய்திருக்கிறாராம். அவரிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஆடி க்யூ 7 போன்ற சொகுசு கார்களும் இருக்கின்றனவாம். ஸ்ருதி ஹாசன் இப்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X