Vidaamuyarchi Trisha - விடாமுயற்சி படத்தில் திரிஷாவின் கேரக்டர் பெயர் இதுவா?.. அட சூப்பரா இருக்கே

சென்னை: விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கிவருகிறார். இதில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் ஏகே ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு போட்டியாக வாரிசு படம் களமிறங்கினாலும் துணிவு படமே வென்றது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Here is the details about Trisha Character name in Vidaamuyarchi Movie

நோ அப்டேட்: விடாமுயற்சி அஜித்தின் 62ஆவது படமாக உருவாகிவருகிறது. முதலில் ஏகே 62வை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள். அதற்கு பிறகு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்திக்கே சென்றனர்.

தொடங்கிய ஷூட்டிங்: அதிகாரப்பூர்வமாக எந்த அப்டேட்டும் வரவில்லை என்றாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ் ஷா முதலில் ஒளிப்பதிவாளராக கமிட் செய்யப்பட்டு பிறகு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக படத்தில் சேர்க்கப்பட்டார். நீரவ் ஷாவுக்கும் மகிழ் திருமேனிக்கும் செட் ஆகாததால்தான் இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது.

அஜித் - திரிஷா: இப்படத்தில் அஜித்தும், திரிஷாவும் கணவன், மனைவியாக நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த படங்கள் அனைத்திலுமே இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக செய் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படத்திலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷாவின் பெயர் என்ன?: இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் திரிஷாவின் கேரக்டர் பெயர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் திரிஷா கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. ஆனாலும் இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

என்ன கதை: இதற்கிடையே படத்தின் கதை குறித்தும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அதில் அஜித்தும், திரிஷாவும் ஒரு விஷயமாக வெளிநாடு செல்கின்றனர். அந்த சமயத்தில் திரிஷாவை வில்லன் கும்பல் கடத்திவிடுகிறது. அந்த கும்பலிடமிருந்து அஜித் எப்படி திரிஷாவை மீட்கிறார் என்பதுதான் ஒன்லைன் என்று சொல்லப்பட்டது. இதனை கேட்ட ரசிகர்கள் அரத பழசான ஒன்லைனாக இருந்தாலும் மகிழ் திருமேனி ஸ்க்ரீன் பிளேவில் அதனை சரிக்கட்டிவிடுவார் என்று ஆவலோடு கூறிவருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X