Rashmika Mandanna - உச்சபட்ச கிளாமர்.. அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
மும்பை: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) அனிமல் படத்தில் நடித்ததற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க அவரது கிராஃப் சரசரவென உயர்ந்தது. அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.

பான் இந்தியா ஹீரோயின்: ராஷ்மிகா மந்தனா மீதான கிரேஸ் கீதா கோவிந்தம் படத்திலிருந்தே ரசிகர்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்றாலும் அவரை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்தது புஷ்பா திரைப்படம். பான் இந்தியா அளவில் வெளியாகி படமும் ஹிட்டானது. அதிலும் படத்தின் பாடல்களில் ராஷ்மிகாவின் நடனம் பெரும் ட்ரெண்டானதால் ராஷ்மிகாவும் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாறினார். இதன் காரணமாக ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார் அவர்.
ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா: அந்தவகையில் அவர் ஹிந்தியில் கடைசியாக ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் மிஷன்மஜ்னு என்ற ஹிந்தி படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. அதேபோல் அனிமல் படமும் ஹிட்டாகி ஹிந்தியில் தனக்கு ஒரு நிலையான இடத்தை கொடுக்கும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ராஷ்மிகா இருந்தார்.
கடும் விமர்சனம்: அனிமல் படம் சமீபத்தில் வெளியானது. அதனை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர் முதன்முறையாக தென் மாநில இயக்குநருடன் இணைந்திருப்பதால் படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்துக்கு கடுமையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. குறிப்பாக முகம் சுளிக்கும் ஆபாச காட்சிகளும், அதீத வன்முறை காட்சிகளும் சலசலப்பை ஏற்படுத்தின.
ராஷ்மிகா மந்தனா: அதிலும் ராஷ்மிகா மந்தனாவும் ஏராளமான முத்த காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அனிமல் படத்தில் நடித்ததற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது படத்தில் ஏராளமான கிளாமர் காட்சிகளும் முத்த காட்சிகளும் இருந்ததால் தன்னுடைய சம்பளத்தை 15 கோடி ரூபாயாக ஃபிக்ஸ் செய்து வாங்கிக்கொண்டாராம். இது பாலிவுட்டில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதும் தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ராஷ்மிகாதான் டாப் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











