Nayanthara - என்னடா இது சோதனை.. கணவர் படத்திலேயே நயன்தாராவுக்கு இடம் இல்லையா?
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளியானது. அவரது 75ஆவது படமாக உருவான அது போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த சூழலில் நயன் தாரா குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார்.

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.
தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
எல்ஐசி: இதற்கிடையே அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து அவர் விலகினார். இதனையடுத்து அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐசி படத்தை இயக்கிவருகிறார். லியோ திரைப்படத்தை தயாரித்த லலித் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதற்கிடையே இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்பட்டது.
சிக்கல்: இந்நிலையில் இந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி நயன்தாராவின் சம்பளம் இப்போது 12 கோடி ரூபாயாக இருக்கிறது. எனவே எல்.ஐ.சியில் அவரை நடிக்க வைத்தால் அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது. இந்தப் படத்தை குறைந்த பட்ஜெட் படமாகவே முடித்துவிடலாம் என்ற கணக்கை லலித் போட்டுவிட்டதாகவும் அதனால் ஒன்று சம்பளத்தை குறைத்தால் இதில் நயன் நடிக்கட்டும் இல்லை என்றால் வேறு ஆர்ட்டிஸ்ட்டை பார்க்கும்படி விக்னேஷ் சிவனிடம் லலித் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தன்னுடைய கணவருக்காக சம்பளத்தை குறைத்து எல்.ஐ.சி படத்தில் நடிப்பாரா இல்லை சம்பளத்தை குறைக்காமல் படத்திலிருந்து நயன்தாரா வெளியேறுவாரா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











