Srividya - 3 முறை கருக்கலைப்பு.. ஸ்ரீவித்யாவுக்கு வில்லனாக மாறிய கணவர்.. கொடூரமா கஷ்டப்பட்டிருக்காரே
சென்னை: நடிகை ஸ்ரீவித்யா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மிகச்சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற அவர் கமல் ஹாசனை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் கைகூடவில்லை. இதனையடுத்து ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை சரியாக இல்லை. ஒருகட்டத்தில் புற்றுநோய் வந்து உயிரிழந்துவிட்டார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீவித்யா திருவருட்செல்வர் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனையடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்திவந்த அவர் கே.பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தின் மூலம் மேஜர் ரோல் செய்ய ஆரம்பித்தார். அதில் அவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததன் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. அதன் பிறகு அன்னை வேளாங்கண்ணி, டெல்லி டூ மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கமலுடன் காதல்: கமல் ஹாசனுடன் அவர் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தார். அந்த சமயத்தில் இரண்டு பேருமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என இரு குடும்பத்தாரும் விரும்பினார்கள். அதுமட்டுமின்றி கமலும் ஸ்ரீவித்யாவும் காதலிக்கவும் செய்தார்கள். ஆனால் ஸ்ரீவித்யாவின் அம்மாவுடைய அறிவுரைப்படி இரண்டு பேருமே பிரிந்தார்கள். இந்த விவகாரம்தான் கடந்த சில நாட்களாகவே மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டானது.
திருமணம்: இருவருக்குமான காதல் முறிவுக்கு பிறகு ஸ்ரீவித்யா அவரது பாதையிலும், கமல் ஹாசன் அவரது பாதையிலும் செல்ல ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் ஸ்ரீவித்யா ஹீரோயின் வாய்ப்புகளை இழந்து அம்மா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி தமிழ், மொழிகளில் அதிக குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இதற்கிடையே ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவித்யா. ஆனால் அந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. அதனையடுத்து விவாகரத்து பெற்றுக்கொண்ட அவர் கடைசி காலத்தில் தனியாகவே வாழ்ந்தார்.
ஆசை: அவரது கடைசி ஆசையாக இருந்தது என்னவென்றால் கமல் ஹாசனை சந்திப்பதுதான். ஒருவழியாக கமல் ஹாசனும் ஸ்ரீவித்யாவை நேரில் சென்று சந்தித்தார். அதன் பிறகு அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் அவரது திருமண வாழ்க்கை குறித்து அவரது அண்ணி விஜி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "திருமண வாழ்க்கையில் ஸ்ரீவித்யா கர்ப்பம் ஆனார். ஆனால் குழந்தை பெற்றால் நடிக்க முடியாது என்பதால் அவரது கணவர் ஜார்ஜின் தூண்டுதல்பேரில் கருவை கலைத்துவிட்டார்.
பணம் தரும் மெஷின்: ஸ்ரீவித்யாவை ஜார்ஜ் ஒரு பணம் தரும் மெஷினாகவே பார்த்தார். ஒரு சமயம் ஸ்ரீவித்யாவின் ஹேர் டிசைனர் வந்து ஸ்ரீவித்யாவின் அண்ணனிடம், என்ன அந்தப் பொண்ணை அப்படி விட்டுட்டீங்க. கை நிறைய தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு சாகப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக சொன்னார். உடனே வேக வேகமாக ஸ்ரீவித்யாவின் வீட்டுக்கு அவரது தாய் சென்றிருக்கிறார்.
ஆனால் தாயையும், மகளையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு ஜார்ஜ் சென்றுவிட்டார். அருகில் இருந்தவர்களின் உதவியால் அங்கிருந்து இரண்டு பேரும் வெளியேறினார்கள். ஸ்ரீவித்யா கிறிஸ்டியனாக மாறியதால் விவாகரத்தும் பெற முடியாமல்; வேறு ஒரு திருமணமும் செய்யாமல் பத்து வருடங்கள் போராடினார். ஒருவழியாக விவாகரத்து பெற்று தனிமையிலேயே இருந்து தனது உயிரை விட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











