’ராம் லீலா’ செட்ல தீபிகா ஏன் ‘ஆனந்தக் கண்ணீர்’ வடிச்சாங்க தெரியுமா?
மும்பை: தீபிகா படுகோனே ரன்வீர் சிங் ஜோடியாக சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை எக்ஸ்பிரஸின் சூப்பர் வெற்றியைத் தொடர்ந்து, தீபிகா நடிப்பில் உருவாகி வரும் ராம்லீலாவை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் ராம்லீலா ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தீபிகா படுகோனே அழுதது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

லேட்டா போனதுக்கா..?
சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றிக்களிப்பில் இருக்கும் தீபிகா, சமீபத்தில் ஷூட்டிங்கிற்கு லேட்டாகச் சென்று பன்சாலியிடம் திட்டு வாங்கினார். அதனால் தான் அவர் அழுதிருப்பார் என நீங்கள் நினைத்தால் அது தவறு.

கடினமான காட்சியா...?
சரி கடினமான காட்சி அதில் நடிக்க முடியாமல் தான் தீபிகா அழுதார் என நினைத்தால் அதுவும் தவறு தான். பிறகு எதுக்குத்தான்யா அந்தப் பொண்ணு அழுதுச்சுனு கேட்குறீங்களா..?

ஆனந்தக் கண்ணீர்....
தீபிகாவின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் பன்சாலி. உடனடியாக தீபிகாவின் நடிப்பைப் பாராட்டி நாலு நல்ல வார்த்தை பன்சாலி பேச, ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார் தீபிகா.

சூப்பர் தீபிகா...
கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிப்பில் வெளுத்து வாங்கி விட்டாராம் தீபிகா. அதைப்பார்த்துத் தான் பன்சாலி, ‘இந்தப்படத்துல தீபிகா நடிப்பு அற்புதம்' எனப் பாராட்டினாராம். பன்சாலியின் பாராட்டைக் கேள்விப்பட்ட தீபிகா மகிழ்ச்சியில் மிதந்துவருகிறாராம்.


Click it and Unblock the Notifications











