ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சுட்டு கொலை.. வெளியான செய்தி.. ஷாக்கான குடும்பம்.. அப்படி என்ன நடந்தது?
மும்பை: பாலிவுட் திரையுலகில் 90களில் படு ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷிரோத்கர். ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இப்போது வயது 51. முழு ஓய்வில் இருக்கும் அவர் தமிழில் அரசியல் என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
ரமேஷ் சிப்பி இயக்கத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் Bhrashtachar. இதில் மிதுன், ரஜினிகாந்த், ரேகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் மூலம்தான் ஷில்பா ஷிரோத்கர் நடிகையாக அறிமுகமானார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வரிசையாக பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
பிஸியான நடிகை: ஒருகட்டத்தில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஷில்பா. அதன் காரணமாக தமிழிலும் அவர் நடித்தார். 1997ஆம் ஆண்டு வெளியான அரசியல் என்ற படத்தில் நடித்த அவர்; அதற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ஷில்பாவின் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சுனில் ஷெட்டியுடன் ரகுவீர் என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் நான் சுட்டு கொல்லப்பட்டுவிட்டேன் என்று செய்தித்தாள்களில் தலைப்பு செய்தி வந்துவிட்டது. அதனைப் பார்த்து எனது பெற்றோர் எல்லாம் பதறிவிட்டார்கள். குலுமணாலியில்தான் அந்த ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அந்த செய்தியை படித்தவுடன் என்னுடைய அப்பா நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஃபோன் செய்து விசாரித்திருக்கிறார். ஆனால் அவர் ஃபோன் செய்த சமயத்தில் நான் ஷூட்டிங்கில் இருந்தேன்.
வியந்து பார்த்த ரசிகர்கள்: அதுமட்டுமின்றி நான் நடித்துக்கொண்டிருந்தபோது; ஷூட்டிங் பார்த்த மக்கள் வியந்து போய் பார்த்தார்கள். ஏனெனில் நான் இறந்துவிட்டேன் என்ற செய்தியை அவர்களும் படித்துவிட்டார்கள். அதன் காரணமாக இவர் உண்மையில் ஷில்பாதானா இல்லை வேறு யாராவதா என்று பார்த்தார்கள். ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினேன். அப்போது எனக்கு அத்தனை ஃபோன் கால்கள் வந்திருக்கின்றன என்பது தெரியவந்தது. யார்தான் இப்படி ஒரு செய்தியை வெளியே சொன்னது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
தயாரிப்பாளரின் வேலை: அப்போது படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் வந்து, 'பப்ளிசிட்டிக்காக நான்தான் அப்படி ஒரு செய்தியை கொடுத்தேன்' என கூறினார். நான் ஷாக்காகி இதெல்லாம் ஓவர் சார் என்று சொன்னேன். அப்போது பி.ஆர்.ஓ வேலை எல்லாம் சினிமாவில் இல்லை. அதேபோல் ஏதாவது ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி வாங்கும் பழக்கமும் இல்லை. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதால் அப்படி விளம்பரம் கொடுத்ததை நினைத்து கோபம் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











