'ஹீரோயின்' மனீஷா கதையா?
ஏற்கெனவே தென்னிந்தியாவின் மறக்க முடியாத நடிகையான மறைந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் குறைவில்லாத மனீஷாவின் வாழ்க்கையும் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த மனீஷா, திடீரென திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்னும் நடித்தார். திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் அது பொய் என்றார்.
குடித்துவிட்டு போதையில் தள்ளாட்டத்துடன் வேறு இளைஞர் துணையுடன் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டதாக மனீஷா பற்றி செய்தி வந்தது.
இந்நிலையில் இயக்குனர் மதுர் பண்டர்கர் 'ஹீரோயின்' என்ற படத்தை இயக்குகிறார். கரீனா கபூர் ஹீரோயின். இப்படம் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இயக்குனர் மறுத்திருக்கிறார்.
வந்தால் தெரிந்துவிடப் போகிறது!


Click it and Unblock the Notifications












