கூலி ஹீரோயின் வெர்ஷன் தாறுமாறா இருக்கேப்பா.. மிருணாள் தாகூர் முதல் மாளவிகா மோகனன் வரை.. ’நச்’ எடிட்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றாலே ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா என இளம் நடிகர்களை வைத்தே படத்தை ஹிட்டாக்கினார். கார்த்தியுடன் இணைந்து அடுத்து அவர் எடுத்த கைதி படம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்துக்கே டஃப் கொடுத்தது.
அதன் காரணமாகவே லோகேஷ் கனகராஜுக்கு மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கும் வாய்ப்பை தளபதி விஜய் கொடுத்தார். கமல்ஹாசன் உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு பல வருடங்கள் கழித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக அமைந்தது. விக்ரம் படத்தின் வசூல் சாதனையை கூட தக் லைஃப் படம் முறியடிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இப்படியொரு சூழ்நிலையில், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளத்தையே வைத்து அவர் இயக்கியுள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அனிருத் இசை: லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றிய அனிருத் மீண்டும் கூலி படத்தில் பணியாற்றி வருகிறார். அவரது இசையில் வெளியான "கூலி பவர் ஹவுஸ்" பாடல் ஏற்கனவே ஏகப்பட்ட ரீல்ஸ் மற்றும் எடிட் வீடியோக்களுடன் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், அதில், தற்போது ஹீரோயின் வெர்ஷன் ஒன்றையும் நெட்டிசன்கள் எடிட் செய்துப் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
மிருணாள் தாகூர் முதல் மாளவிகா மோகனன் வரை: நயன்தாரா, த்ரிஷா எல்லாம் வயசாகிவிட்ட நிலையில், அவர்களை எல்லாம் விட்டு விட்டு நெட்டிசன்கள் லேட்டஸ்ட் ஹீரோயின் கிரஷ்களை வைத்து எடிட் செய்துள்ள எடிட் தாறுமாறாக உள்ளது. மிருணாள் தாகூர், பாக்யஸ்ரீ போர்ஸ், மீனாட்சி சவுத்ரி மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்ட இளம் நடிகைகளை வைத்து அட்டகாசமான கூலி பவர் ஹவுஸ் எடிட் வீடியோவை போட்டு விசிலு பறக்க விட்டுள்ளனர். அதிலும், கடைசியாக மாளவிகா மோகனன் வருவதெல்லாம் வேறலெவல்.
பூஜா ஹெக்டே மிஸ்ஸிங்: இதில், நடிகை பூஜா ஹெக்டே மிஸ்ஸிங் என்றும் ராஷ்மிகா மந்தனாவை எங்கே காணோம் என்றும் எல்லாரையும் விட மிருணாள் தாகூர் தான் டாப் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இது ரொம்ப நல்லா இருக்கு என்றும் ரசிகர்கள் சொக்கிப் போய் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
முடி கொட்டுற எடிட்: இதுமட்டுமின்றி கூலி படத்தின் ஒரிஜினல் வெர்ஷனை வைத்தே பல எடிட்டுகள் வைரலாகி வருகின்றன. அதிலும், நாகார்ஜுனா, உபேந்திரா போல இருந்த முடி கொஞ்சம் கொஞ்சமாக ரஜினிகாந்த், செளபின் சாஹிர் மற்றும் கடைசியாக மொத்தமாக சத்யராஜ் மண்டை போல மொழுக்கட்டையாக மாறிவிட்டது என வெளியிட்டுள்ள எடிட் எல்லாம் மரண பங்கம். அடுத்த வாரம் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையிலும், தொடர்ந்து கூலி சோஷியல் மீடியாவை டாமினேட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











