இது மகள்களின் ராஜபாட்டை.. தலைகீழாக மாறிய வாரிசு பார்முலா!

சென்னை: பிரபல நடிகர், நடிகைகளின் வாரிசுகளும் சினிமாவுக்குள் வருவது காலங்காலமாக நடந்து வரும் ஒன்று.

வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முதல் வாய்ப்புகள் எளிதாக கிடைத்தாலும், திறமை உள்ளவர்கள் மட்டுமே நிலைத்துள்ளனர்.

75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு பலர் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர்.

மகள்களின் ஆதிக்கம்

மகள்களின் ஆதிக்கம்

முன்பெல்லாம் மகளை சினிமாவில் அறிமுகம் செய்ய பிரபலங்கள் தயக்கம் காட்டினர். இயக்குனர்கள் சங்கர், மணிரத்னம் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை இதற்கு விதி விலக்கல்ல. (ரஜினியின் மகள்கள் இயக்குனராக, அனிமேஷன் ஜொலித்தாலும் திரையில் அறிமுகமாகவில்லை ).

தலைகீழ் மாற்றம்

தலைகீழ் மாற்றம்

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாற தொடங்கியுள்ளது. நிறைய மகள் வாரிசுகள் களம் இறங்கி கலக்க ஆரம்பித்து விட்டனர். நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என யாரும் இதில் விதி விலக்கல்ல.

கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி

கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், ராதா மகள்களான ‘கோ'கார்த்திகா, ‘கடல்' துளசி, சரத்குமார் மகள் வரலட்சுமி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பழைய நடிங்கர் ரவிசந்திரனின் பேத்தி தன்யா, பாக்யராஜ் மகள் சரண்யா, சினிமா குடும்பத்திலிருந்து வந்த கீர்த்தி சுரேஷ் உட்பட இடைப்பட்ட காலத்தில் ஏராளமான வாரிசு நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர்.

அருண் பாண்டியனின் மகள்

அருண் பாண்டியனின் மகள்

தற்போது இந்த வரிசையில் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் இணைந்துள்ளார். வாரிசு நடிகர்கள் வெற்றி பெற்றுள்ள அளவுக்கு, வாரிசு நடிகைகளின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், இது ஒரு ஆரோக்கியமான மாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X