நம்ம ஹீரோயின்களை அலற வைக்கும் ஃபோபியாக்கள் என்னென்ன தெரியுமா?
Recommended Video

ஃபோபியா என்றால் ஒரு விஷயத்தை கண்டு பயப்படுவது என்பது சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். நம்ம ஹீரோயின்களுக்கு என்னென்ன ஃபோபியாக்கள் இருக்கு... அதாவது எதை எதையெல்லாம்- கண்டெல்லாம் அவங்களுக்கு பயம்னு தெரிஞ்சுக்கலாமா...

தமன்னா
இந்த ஸ்லிம் கம் பளிச் பியூட்டிக்கு அக்ரோஃபோபியா. ஏதோ விவசாயத்தை பார்த்து பயம்னு நினைச்சுக்காதீங்க... உயரத்தை பார்த்து பயப்படறவங்களுக்குதான் இந்த பெயர். பாகுபலி படத்துக்காக உயரமான இடத்துலேர்ந்து ரோப் கட்டி சண்டை போடற மாதிரில்லாம் இருந்ததால அந்த பயம் தெரியாம இருக்க ஸ்பெஷல் பயிற்சிகள் எடுத்துகிட்டாங்களாம். அதனால இப்ப கொஞ்சம் பயம் போயிருக்குனு சொல்லியிருக்காங்க...

த்ரிஷா
அழகு புயல் த்ரிஷாவுக்கு பேய் படங்கள்னா பயமாம். 'எல்லா படங்களையும் பிடிக்கும். ஆனா பேய் படம் பார்க்கவே மாட்டேன். ஆனா என்னையும் ரெண்டு பேய் படங்கள்ல நடிக்க வெச்சுட்டாங்க... அந்தப் படத்துல நான் நடிச்சும் கூட பார்க்க பயந்தேன்'னு சொல்லியிருக்காங்க... (அப்பாடா... நாயகி பார்ட் 2 வராது!)

ஹன்சிகா
பாக்டிரியாஃபோபியா. அதாவது மத்தவங்களை தொடறதாலோ வெளில காண்டக்ட் வெச்சுக்கறதாலயோ பாக்டிரியா இன்ஃபெக்ஷன்ஸ் வந்துடுமோன்னு பயப்படறது. இதுக்கு பயந்துகிட்டே ஹன்சிகா லிப்லாக் காட்சிகள்ல நடிக்கிறது இல்லையாம். (உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது... வேண்டாம்!)

காஜல் அகர்வால்
ஆர்னிதோஃபோபியா. என்னடா புதுசா இருக்குனு யோசிக்காதீங்க... பறவைகளை கண்டா பயப்படறதுக்கு பேர் தான் இந்த ஆர்னிதோஃபோபியா. பறவைகளை பார்க்கவே பயப்படுவாங்களாம். அதனாலயே மாரி படத்துல நடிக்கும்போது புறாவை கையில வெச்சுக்குற காட்சிகள்ல பல டேக்குகள் வாங்கினாங்களாம். (ஒருவேளை தூக்கிட்டு போய்டுமோன்னு பயப்படுவாங்களோ?)

டாப்ஸி
டாப்ஸிக்கும் த்ரிஷா மாதிரியே பேய் படங்கள்னா பயம். இதனாலேயே காஞ்சனா 2 படத்துக்கு வந்த வாய்ப்பை முதல்ல மறுத்தாங்களாம். ஆனா ஹாரர் காமெடிகறதால ஓகே சொன்னாங்களாம். இன்னிக்கு வரைக்கும் அந்த படத்தையே பார்க்கலைனா பார்த்துக்குங்க...

ஸ்ரேயா
அஃபின்ஃபோஸம்ஃபோபியா (அப்படித்தான் பாஸ் போட்டுருக்கு... வாய் கோணிக்கிட்டா நாங்க பொறுப்பு இல்லை). அதாவது கூட்டத்தைப் பார்த்தா பயப்படறது. அதிகமா கூட்டங்கள்ல இதனாலேயே ஸ்ரேயாவைப் பார்க்க முடியாதாம். பொது இடங்களுக்கு போகறதுக்கே பயப்படுவாங்களாம் (ஓஹோ... புரமோஷன்களுக்கு வராம இருக்க இப்படி ஒரு சாக்கா?)

நந்திதா
நம்ம அட்டகத்தி நந்திதாவுக்கு பாம்புகள்னா ரொம்ப பயமாம். பக்கத்துல நிக்கவே பயப்படுவாங்களாம். அது கூண்டுக்குள்ளயே இருந்தாலும் கூட... ஏன் கனவுல பாம்பு வந்தாக் கூட பயப்படுவாங்களாம். (கனவுல பாம்பு வந்தா... சரி வேண்டாம். விட்டுடுவோம்!)
நமக்கு சில ஹீரோயின்களை மேக்கப் இல்லாம பார்க்கிறதுன்னாதான் பயம். அந்த ஹீரோயினோஃபோபியா இவங்க யாருக்கும் தெரிய வேண்டாம்.
தொகுப்பு - ஆர்ஜி


Click it and Unblock the Notifications











