ஹே ராம், சிட்டிசன் ஹீரோயினை ஞாபகமிருக்கா?.. 48 வயதில் எப்படி இருக்காரு பாருங்க.. ஆளே மாறிட்டாரே!

பெங்களூர்: கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை வசுந்தரா தாஸ் பல வருடங்களாக பெரிய மீடியா வெளிச்சம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஹேராம் படத்தில் மைத்திலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் பாடகி வசுந்தரா தாஸ். அந்த படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெள்யான சிட்டிசன் படத்திலும் அவர் தான் ஹீரோயின். "பூக்காரி" பாடலும் அவரது பூனை கண்களும் ரசிகர்களை இன்றளவும் கவர்ந்து வருகின்றன.

Hey Ram and Citizen fame Vasundhara Das recently spotted at Bangalore video goes viral
Photo Credit:

பிக் பாஸ் போட்டியாளராக வசுந்தரா தாஸ் வரப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவினாலும், அவர் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், வசுந்தரா தாஸின் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகி உள்ளது.

ஹேராம், சிட்டிசன் ஹீரோயின்: கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகை வசுந்தரா தாஸ் 6 வயதில் இருந்தே பாடல்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்து கிளாசிக்கல், இந்துஸ்தானி உள்ளிட்ட இசையை கற்றுக் கொண்டு வந்தார். ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான முதல்வன் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்த நிலையில், அதே சமயத்தில் கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் ஹீரோயினாகவும் நடிக்க இவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்தது. ஹேராம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் உடன் ராவண பிரபு படத்தில் நடித்த வசுந்தரா தாஸ் தமிழில் அஜித் குமாரின் சிட்டிசன் படத்திலும் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

Hey Ram and Citizen fame Vasundhara Das recently spotted at Bangalore video goes viral
Photo Credit:

சினிமாவுக்கு குட்பை: சினிமாவில் நடிப்பதை விட இசைத்துறையில் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார். தமிழ் படங்களை தாண்டி இந்தியிலும் இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. தனது மியூசிக் ட்ரூப்பில் இருந்த நண்பர் ராபர்டே நரைனை 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு குட் பை சொன்ன வசுந்தரா தாஸ் கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான கெளரி படத்தில் சிறப்பு கேமியோவாக நடித்துள்ளார்.

48 வயதில் எப்படி இருக்காரு பாருங்க: பெங்களூரில் நடைபெற்று வரும் கரிகார் பஜார் எனும் கைவினைப் பொருள் கண்காட்சியில் நடிகை வசுந்தரா தாஸ் கலந்துக் கொண்டு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. 48 வயதாகும் வசுந்தரா தாஸை பார்த்த ரசிகர்கள் நம்ம பூக்காரி வசுந்தரா என்ன மகாபலிபுரத்துக்கு வந்த இங்கிலிஷ்காரி மாதிரி இருக்காரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X