காதலருடன் ஜாலி டிரிப்... மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் ஹினா... வைரலாகும் பிகினி போட்டோ...
மும்பை: இந்தி நடிகை ஹினா கானின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹினா கான். இந்தி பிக்பாஸ் சீசன் பதினொன்றில் பங்கேற்று பிரபலமானார்.
சில ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ள இவர், இந்தி சினிமாவிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார்.

ட்ரெஸிங் ஸ்டைல்
இவருடைய ட்ரெஸிங் ஸ்டைலுக்காக பிக்பாஸ் ரசிகர்களிடையே பாராட்டுகள் பெற்றார். பிறகு வித்தியாசமான ஆடைகளை அணிந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கம்.

மாலத்தீவில்
அவர், இப்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது காதலர் ராக்கி ஜெய்ஸ்வாலுடன் அவர் மாலத்தீவுக்குச் சென்றுள்ளார்.

ஸ்கூபா டைவிங்
அங்கு ஸ்கூபா டைவிங், மிதக்கும் ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டது உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதோடு பீச் மணலில், பிகினி உடையில் அவர் எடுத்துள்ள புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்

பிகினி உடை
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் சிலர் வரவேற்றிருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











