»   »  பாலிவுட்டைப் பற்ற வைக்க வரும் ஹாலிவுட்டின் தித்திக்கும் தீ....!

பாலிவுட்டைப் பற்ற வைக்க வரும் ஹாலிவுட்டின் தித்திக்கும் தீ....!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் கலைச் சேவை செய்து டயர்ட் ஆகி விட்டார்களோ என்னவோ, இப்போதெல்லாம் வெளிநாடுகளிலிருந்து கலைச் சேவைக்கு படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

நதாலியா ஜனோஸெக்... இவர்தான் பாலிவுட்டுக்குப் படையெடுத்து வந்திருக்கும் புதிய ஹாலிவுட் நடிகை. கவர்ச்சியில் கலங்கடிக்கும் இவர் ஃபிளேம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

முன்பு நர்கீஸ் பக்ரி வந்தார். பிறகு ஏமி ஜாக்சன் வந்தார். ஹேஸல் கீச் வந்தால், இப்போது நதாலியா வந்திருக்கிறார். பாலிவுட்டைப் புயல் போல கலக்குவேன் என்று தொடை தட்டி உறுதிபடத் தெரிவிக்கிறார் நதாலியா.

மிஸ் பிகினி

மிஸ் பிகினி

சீனாவில் 2013ம் ஆண்டு நடந்த மிஸ் பிகினி அழகிப் போட்டியில் பட்டம் வென்ற சாதனையாளர் இந்த நதாலியா. இவருக்காக பிகினி உடை பிறந்ததா அல்லது இவர் பிகினிக்காக பிறந்தாரா என்று டவுட் வரும் அளவுக்கு பிகினியில் பிரமாதமாக காணப்படுகிறார் நதாலியா.

ஃபிளேம்

ஃபிளேம்

பாலிவுட்டில் தயாராகியுள்ள ஃபிளேம் படம் ஏற்கனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடித்து அறிமுகமாகியிருக்கிறார் நதாலியா. 9 சர்வதேச விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

சீனாவில் கண்டெடுக்கப்பட்ட போலந்து நதாலியா

சீனாவில் கண்டெடுக்கப்பட்ட போலந்து நதாலியா

இந்தப் படத்தில் நடிப்பதற்காக பலரையும் தேடி கடைசியில் சீனாவில் வைத்து நதாலியாவைக் கண்டுபிடித்தனராம். நதாலியாவின் பூர்வீகம் போலந்து ஆகும். பாலிவுட் குறித்து நதாலியாவுக்கும் நிறையவே ஆசை இருந்ததால் வந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டாராம்.

செம சான்ஸ்

செம சான்ஸ்

இதுகுறித்து நதாலியா கூறுகையில், இது எனக்கு நல்ல வாய்ப்பு. எனவேதான் ஒத்துக் கொண்டேன். பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாகும். அது தற்போது நிறைவேறியுள்ளது.

டான்ஸுன்னா உயிர்

டான்ஸுன்னா உயிர்

எனக்கு டான்ஸ் என்றால் உயிர். இதில் நடனமாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. எனது திறமைகளை முழுமையாக காட்ட உதவிய படம் இது. தொடர்ந்து இங்கேயே இருப்பேன். நிறைய நடிப்பேன். சாதனை படைப்பேன் என்கிறார் நதாலியா.

மிஸ் போலந்தும் கூட

மிஸ் போலந்தும் கூட

நதாலியா மிஸ் போலந்து அழகிப் பட்டத்தையும் வென்றுள்ளாராம். அமெரிக்காவில் தயாரானா கோச்செல்லா மஸாக்கர் என்ற படத்திலும் நடித்துள்ளாராம்.

பாட்டும், டான்ஸும் பட்டையைக் கிளப்பும்

பாட்டும், டான்ஸும் பட்டையைக் கிளப்பும்

நதாலியா வாயைத் திறந்தால் நன்றாகப் பாடுகிறார். காலை அசைத்தால் நன்றாக ஆடுகிறார். 3 வயதிலிருந்தே டான்ஸ் ஆடி வருகிறாராம். சர்வதேச நடன நிகழ்ச்சிகள் பலவேற்றில் கலந்து கொண்டு அசத்தியுள்ளாராம்.

பிரேசில்ல கூப்பிட்டாக.. செர்பியாவில் கூப்பிட்டாக

பிரேசில்ல கூப்பிட்டாக.. செர்பியாவில் கூப்பிட்டாக

போர்ச்சுகல், ஸ்பெயின், பிரேசில், இத்தாலி, செர்பியா, துருக்கி, இந்தோனேசியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் போய் இவர் டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளாராம்.

English summary
After Nargis Fakhri, Amy Jackson and Hazel Keech it is now Natalia Janoszek who wants to take on bollywood by storm. The Indian filmmakers have broadened their horizon and are roping in pageant winners from abroad One such sultry babe who has got the looks as well as talent Natalia Janoszek, who’s been coveted with titles such as Miss Bikini Universe pageant in China 2013 and made her debut in Flame which is produced by Varun Singh and directed by Rajiv Ruia.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil