டோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு
Recommended Video

ஹைதராபாத்: டோலிவுட்டில் விபச்சாரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்து தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்து வந்த பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா வரும் தெலுங்கு நடிகைகளிடம் விமான நிலையத்திலேயே விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணை
விபச்சார வழக்கில் சிக்கியவர்களில் 2 பேர் பிரபலமான நடிகைகள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் சிக்கிய நடிகைகளிடம் 6 மணிநேரம் விசாரணை நடந்துள்ளது.

ஸ்ரீரெட்டி
அமெரிக்காவில் விபச்சாரம் செய்து சிக்கிய நடிகைகளின் விபரம் தன்னிடம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் நடக்கும் விபச்சாரம் பற்றி அனைத்தும் தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு
நடிகர் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக ஸ்ரீ ரெட்டி அண்மையில் தெரிவித்தார். இதை பார்த்து கோபம் அடைந்த நானி ஸ்ரீ ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











