சமந்தா, த்ரிஷாவை Homewrecker என சொல்வது சரியா?.. ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே.. அப்போ ஆண்கள்?

சென்னை: "ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே" என 2026ம் ஆண்டிலும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். மகளிர் தினத்தில் பல பெண்களை வாழ்த்தியும் சில பெண்களை இழிவுப்படுத்தியும் செய்யும் செயல்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

சங்கீதாவுக்கும் ஆர்த்திக்கும் சப்போர்ட் செய்துக் கொண்டு த்ரிஷாவையும் கெனிஷாவையும் திட்டிக் கொணடே மகளிர் தினத்தை கொண்டாடி முடித்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

Homewrecker Tag for Samantha and Trisha If Women Are Blamed What About Men
Photo Credit:

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்தின் போதும் பலரும் சமந்தாவை தான் திட்டித்தீர்த்தனர். நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சமந்தாவுக்கு உடல்நலம் குன்றியதும் அவரை பாவமாக பார்க்க ஆரம்பித்தனர்.

சமந்தாவுக்கு சாபம்: உடல்நலக்குறைவில் இருந்து தன்னைத் தானே மீட்டுக் கொள்ள அத்தனை உழைப்பையும் முயற்சியையும் நடிகை சமந்தா போட்ட நிலையில், மீண்டும் ஃபிட்டாக மாறினார். தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குநர் ராஜ் நிடிமோருவை 2வதாக அவர் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், மீண்டும் சமந்தாவை சபிக்கத் தொடங்கி விட்டனர். மேலும், ராஜ் நிடிமோரு அவரது முன்னாள் மனைவி ஷியாமலி டேவை விவாகரத்து செய்யவும் சமந்தா தான் காரணம் என்றும் அவர் குடும்பத்தை கெடுத்துவிட்டார் (Homewrecker) என பழி சுமத்த ஆரம்பித்துவிட்டனர்.

Homewrecker Tag for Samantha and Trisha If Women Are Blamed What About Men
Photo Credit:

கெனிஷாவுக்கு கெட்டப்பெயர்: ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு மனைவி ஆர்த்தி ரவி மற்றும் 2 மகன்களையும் விட்டு விட்டு கெனிஷாவுடன் ஜோடி போட்டு சுத்த ஆரம்பித்ததும் கெனிஷாவுக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டது. பலரும் அவரை குடும்பக் கொளுத்தி என கும்மாங்குத்து குத்த ஆரம்பித்தனர். ரவி மோகன் பாவம் ஒன்றுமே தெரியாத பாப்பா போல நல்லா இருந்த அவரது மனதை கெடுத்ததே கெனிஷா தான் என்றனர்.

த்ரிஷா Homewrecker-ஆ?: இவர்கள் இருவரை விட லேட்டஸ்ட்டாக இந்த விவகாரத்தில் பெரியளவில் சினிமா பிரபலங்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊர் கிழவிகள் மாதிரி த்ரிஷாவை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அசிங்கப்படுத்த ஆரம்பித்து விட்டனர். விஜய்யை இவர்களால் வீட்டில் இருக்க சொல்ல முடியுமா? முடியாது. விஜய் பற்றி வெளிப்படையான கருத்தை சொன்னால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மொத்தமாக முடித்து விடுவார்கள் என்பது நன்றாகவே தெரியும். ஈஸி டார்கெட் த்ரிஷா தான் என்பதால் அவரை Homewrecker என அடித்து நொறுக்குகின்றனர்.

தனிப்பட்ட விருப்பம்: பிடிக்காத மனைவியுடன் கணவர் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எந்தவொரு சமூக அழுத்தத்திற்கும் யாரும் ஆளாக தேவையில்லை. அவன் அப்படி பேசுவான், இவன் இப்படி பேசுவான் என நினைத்து பயப்படவும் தேவையில்லை. பிடிக்காத கணவரை எத்தனையோ பெண்கள் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு பிடித்த வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனர். திருமண உறவு, ஆயிரங்காலத்து பெயர், நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் சேர்ந்து வாழணும் என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். அவர்கள் சேர்ந்து வாழ்வதும் பிரிந்து வேறு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதும் அவர் அவர் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. எப்போதுமே பெண்களை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டு மகளிர் தினத்தை கொண்டாட வேண்டாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X