Honey Rose - அயர்லாந்துக்கு சென்ற ஹனிரோஸ் - உருகிப்போன ரசிகர்கள்

சென்னை: Honey Rose (ஹனிரோஸ்) நடிகை ஹனிரோஸ் அயர்லாந்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவில் பிறந்தவர் ஹனிரோஸ் வர்கீஸ். 2005ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாய் ஃப்ரெண்ட் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தாலும் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

 Honey Rose Went To Ireland That Video goes on viral

தமிழில் ஹனிரோஸ்: தமிழில் அவர் முதல்கனவே என்ற படத்தின் மூலம் கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகமானார். சி. பாலமுருகன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக அவர் நடித்தார். அதன் பிறகு கடந்த 2011ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம்புலி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்கள் தவிர தமிழில் மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் ஹிட்டாகவில்லை.

கடும் ட்ரோலை சந்தித்த ஹனிரோஸ்: ஹனிரோஸ் கடைசியாக பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்மா ரெட்டி படத்தில் நடித்தார். அந்தப் படம் எவ்வளவு ட்ரோல்களை சந்தித்ததோ அதே அளவு ஹனிரோஸின் கதாபாத்திரமும் ட்ரோலை சந்தித்தது. அதற்கு காரணம், பாலகிருஷ்ணாவோடு பல வருடங்கள் சொல்லப்போனால் மகள் வயது இருக்கும் ஹனிரோஸ் அப்படத்தில் அம்மா ரோலை ஏற்றிருந்தார். இதனை பார்த்த பலரும் படக்குழுவுக்கு மனசாட்சியே இல்லையா என ஓபனாகவே இணையத்தில் தெரிவித்தனர்.

ஹனிரோஸின் இடுப்பு பகுதி: ஹனிரோஸ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். அதில் தனது புகைப்படங்களையும், நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வீடியோக்களையும் பகிர்வது வழக்கம். அப்படி அவர் பகிரும்போது அவரது இடுப்புப் பகுதியை பலரும் விவாத பொருளாக எடுத்துக்கொள்வர். மேலும், தன் இடுப்புப் பகுதியை பெரிதாக காட்ட அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஹனிரோஸ் விளக்கம்: இந்தப் பேச்சு ஓய்ந்துவிடும் என்று அவர் எதிர்பார்த்த சூழலில் தொடர்ந்து அவரது உடல் அமைப்பை வைத்து உருவ கேலி செய்ய ஆரம்பித்தனர் சிலர். அதனையடுத்து பேட்டி அளித்த ஹனிரோஸ், "நடிகைகள் உடல் கொஞ்சம் குண்டாகிவிட்டாலே உருவ கேலி செய்கிறார்கள். எந்த ஆடையணிந்து எப்படி தங்களை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பது நடிகர்களின் விருப்பம்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்தில் ஹனி: இந்நிலையில் ஹனிரோஸ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அயர்லாந்து நாட்டுக்கு சென்றிருக்கிறார். வெள்ளை நிற புடவையில் டப்ளினில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ரசிகர்களையும் சந்தித்தார். அவரை சந்தித்த ரசிகர்கள் அவரை வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தனர். ஹனிரோஸும் ரசிகர்களை பார்த்து கை அசைத்தவாறு ,மேடையில் நின்றபடி பேசினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X