அஜித் பட நடிகை வெளியிட்ட அல்டிமேட் கவர்ச்சி பிக்... பற்றி எரியும் இணையதளம் !
கொச்சி : தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர்.
நடிப்பதில் மிக ஈடுபாட்டுடன் இருந்து வரும் பார்வதி, அதே போல அளவில்லாத கவர்ச்சியிலும் தொடர்ந்து தரிசனம் தந்து அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.
மாடல் அழகியாகவும், நடிகையாகவும் கலக்கி வரும் இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்.

திருப்புமுனையாக அமைந்தது
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம், மிகச்சிறந்த ஆக்சன் படமாக வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த படம், நடிகர் அருண் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

வில்லன் ரோலில்
ஹீரோ கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த அருண் விஜய், முதன்முறையாக வில்லன் ரோலில் அதுவும் தமிழில் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டு மாஸ் நடிகராக வரும் வரும் அஜித்திற்கு வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்து அனைவரையும் கவர்ந்து தமிழில் அறிமுகமானார்.

மலையாளத்தில் "பாப்பின்ஸ் "
மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர், நடிக்க வருவதற்கு முன் மாடலிங் துறையிலும் மிகச்சிறந்த மாடல் அழகியாக வலம் வந்து பல்வேறு போட்டிகளில் அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இவ்வாறு மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து வந்த இவர் மலையாளத்தில் "பாப்பின்" திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

சிறந்த அறிமுக நாயகி
மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த பார்வதி நாயர் கன்னடத்தில் "ஸ்டோரி கதே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதில் சிறந்த அறிமுக நாயகிக்கான விருதையும் பெற்றார். இவ்வாறு மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்து வரும் பார்வதி ஹிந்தியில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் " 83 "திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

சிகப்பு நிற உடை அணிந்து
திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டு வரும் பார்வதி நாயர், திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற உடை அணிந்து கவர்ச்சி காட்டியவாறு பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தை பற்றி எரிய வைத்துள்ளது.

செம்ம பிட்டான உடையில்
கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் பார்வதி நாயர் தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகு தெரிகின்றவாறு செம பிட்டாக செக்கச்சிவந்த உடை அணிந்து மெழுகு போன்றுள்ள தனது தேகத்தை காட்டியவாறு அனைவரையும் பற்றவைக்கும் பார்வையால் மயக்கி வரும் இந்த அல்டிமேட் கவர்ச்சிப் புகைப்படத்தை தற்போது இணையவாசிகள் ரசித்தவாறு வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications