கோவிட் -19 டெஸ்ட்டுக்கு சென்று கன்னித்தன்மையை இழந்தேன்.. நடிகையின் பகீர் போஸ்ட்.. ரசிகர்கள் திக்!
மும்பை: கொரோனா வைரஸுக்கு சென்று கன்னித்தன்மையை இழந்தேன் என்று பிரபல நடிகை கூறியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரபல இந்தி நடிகை குப்ரா சைட். பெங்களூரைச் சேர்ந்த இவர், அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.
இவரது தம்பி டேனிஷ் சைட், ஸ்டான்ட் அப் காமெடியனாகவும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

சல்மான் கானின் ரெடி
நடிகை குப்ரா சைட், இந்தியில் சல்மான் கான், அசின் நடித்த 'ரெடி' என்ற படம் மூலம் நடிகையாக இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து மாதவன், பிபாஷா பாசு நடித்த ஜோடி பிரேக்கர்ஸ், சன்னி தியோல், கங்கனா நடித்த ஐ லவ் நியூயார்க், சல்மான் கானின் சுல்தான், ரன்வீர் கபூர், ஆலியா பட் நடித்த கல்லிபாய் உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

சேக்ரெட் கேம்ஸ்
நெட்பிளிக்ஸில் வெளியான சேக்ரெட் கேம்ஸ் (Sacred Games) என்ற வெப் தொடரின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த தொடரில் இவர், குக்கூ என்ற திருநங்கையாக நடித்திருந்தார். இந்த தொடரில் சிறப்பாக நடித்ததற்காக அவர் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

பிரபலங்கள்
இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த மாதம் வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரபலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், இயக்குனர் ராஜமவுலி உட்பட பலர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். இப்போது பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை நிக்கி கல்ராணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை அவர் சமூக வலைதள பக்கம் மூலம் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கன்னித்தன்மை இழந்தேன்
இந்நிலையில், நடிகை குப்ரா சைட் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதை செக்ஸூடன் ஒப்பிட்டு அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது: கோவிட் சோதனையில் எனது கன்னித்தன்மையை இழந்துவிட்டேன். உண்மையில் நான் நினைத்ததை போல அவ்வளவு மோசமாக இல்லை. விரைவில் நடந்து முடிந்துவிட்டது. இது எனது சில முன்னாள் காதலர்களை நினைவுப்படுத்தியது' என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

பயந்ததற்கு மாறாக
இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மேலும் கூறும்போது, எனக்கு கொரோனா அறிகுறி இல்லை. பல் அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அதற்கு முன் இந்த சோதனையை மேற்கொண்டேன். அந்த சோதனை நான் பயந்ததற்கு மாறாக 15 நிமிடத்தில் முடிந்துவிட்டது. மக்கள் இதைக் கண்டு பயந்து சோதனை செய்யாமல் இருக்கிறார்கள். மன அமைதிக்காகவும் மற்றவர்களின் பாதுக்காப்பிற்காகவும் இந்த சோதனையை செய்துகொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

நகைச்சுவை
'முதலில் இந்த சோதனை கடினமானது என்று என்னிடம் சொன்னார்கள். இதனால் பயந்தேன்' என்ற அவரிடம் 'இதை ஏன் கன்னித்தன்மையுடன் ஒப்பிட்டீர்கள் என்று கேட்டதற்கு, 'இந்த ட்வீட்டை கண்டு பலர் சிரித்தார்கள். என்னிடமே சிலர் கேட்டார்கள். ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல நகைச்சுவை சிறந்த வழி. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சிரிப்பு தேவை. சில ட்ரோல்களை தவிர மற்ற தீவிரமான கேள்விகளுக்கு பதில் அளித்தேன்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











