ரஜினிக்கு எப்படி 'நோ' சொல்ல முடியும்?: ஆன்ட்ரியா
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எப்படி நோ சொல்ல முடியும் என்று நடிகை ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.
உலக நாயகனுடன் ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமா என்று பல முன்னணி நாயகிகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்பாராமல் ஆன்ட்ரியா கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.
படத்தில் பூஜா குமார் இருந்தாலும் ஆன்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. பரவாயில்லையே ஆன்ட்ரியாவுக்கு கமல் படத்தில் வாய்ப்பு, ஜாக்பாட் தான் என்று பலரும் தெரிவித்தனர்.

தாய்லாந்தில் ஆன்ட்ரியா
ஆன்ட்ரியா தாய்லாந்தில் நடக்கும் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் உள்ளார்.

புதிய திருப்பங்கள் நாயகி
அண்மையில் வெளியான புதிய திருப்பங்கள் படத்தில் ஆன்ட்ரியா நாயகியாக நடித்திருந்தார். இது தவிர ஜீவா, த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

ரஜினிக்கு எப்படி நோ சொல்றது?
கமலுடன் நடித்துவிட்டீர்கள், ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று ஆன்ட்ரியாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், கமலுடன் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தது. அதே போன்று ரஜினியுடன் நடிப்பேன் என்றும் நினைக்கவில்லை. ஆனால் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எப்படி முடியாது என்று சொல்ல முடியும் என்றார்.


Click it and Unblock the Notifications











