For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    ஜூஸ் மட்டுமே குடித்து வெறும் 6 நாட்களில் 3 கிலோ எடை குறைத்த நடிகை

    By Siva
    |

    மும்பை: பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி வெறும் 6 நாட்களில் 3 கிலோ எடை குறைத்துள்ளார்.

    நடிகைகள் தாங்கள் படங்களில் சிக்கென்று இருக்க வேண்டும் என்பதற்காக உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். ஆனால் தற்போது பெரும்பாலான பெண்கள் சிக்கென்று இருக்க விரும்புவதால் அவர்களும் உணவு கட்டுப்பாட்டில் இறங்கிவிட்டனர்.

    ராக்ஸ்டார் இந்தி படம் மூலம் நடிகை ஆனவர் மாடலான நர்கிஸ் ஃபக்ரி. அவரது புது உணவு கட்டுப்பாட்டு பற்றி பார்ப்போம்.

    மெய்ன் தேரா ஹீரோ

    மெய்ன் தேரா ஹீரோ

    நர்கிஸ் வருண் தவான், இலியானாவுடன் சேர்ந்து மெய்ன் தேரா ஹீரோ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றபோது நர்கிஸுக்கு ஒரு ஐடியா தோன்றியுள்ளது.

    ஜூஸ் டயட்

    ஜூஸ் டயட்

    உணவு எதுவும் சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை நர்கிஸு்ககு இருந்துள்ளது. இதை அவர் பாங்காக் ஷூட்டிங்கின்போது நிறைவேற்றியுள்ளார்.

    3 கிலோ

    3 கிலோ

    நர்கிஸ் 6 நாட்கள் வெறும் பழச்சாறு மட்டும் குடித்து வந்துள்ளார். இந்த 6 நாட்களில் அவர் 3 கிலோ எடை குறைந்துள்ளார்.

    இலியானா

    இலியானா

    நர்கிஸ் தான் உடல் எடையை குறைத்ததோடு மட்டும் அல்லாமல் இலியானாவையும் பழச்சாறு டயட்டில் இருக்க வைத்துள்ளார். ஆனால் இலி ஒரு நாள் மட்டுமே பழச்சாறு டயட்டில் இருந்துள்ளார்.

    பென்சில் உடம்பு

    பென்சில் உடம்பு

    பாலிவுட் நடிகைகள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்து பென்சில் போன்று இருக்கின்றனர். அதில் வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட சிலர் மட்டுமே விதிவிலக்காக பூசினாற் போல் உள்ளனர்.

    English summary
    Model-actress Nargis Fakhri has turned dietician for her upcoming film Main Tera Hero. Nargis, who herself shed weight by going on a special juice diet, made her co-star Illeana D'Cruz try the same for one of the scenes in the film.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more