Don't Miss!
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செல்லத்த கட்டிபிடித்து தூங்குவதே ஒரு சுகம் தான்.. கீர்த்தி சுரேஷ்!
சென்னை : தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக உள்ள கீர்த்தி சுரேஷ் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்க இப்பொழுது செல்லமாக வளர்க்கும் குட்டி பப்பியை கட்டிப்பிடித்து தூங்கும் க்யூட் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
மகாநடி, மிஸ் இந்தியா, பெண் குயின் ஆகிய படங்களை தொடர்ந்து குட்லக் சகி மற்றும் வஷி உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக உள்ளது.
வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன் ஆனால்..கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த ஷாக்கிங் புகைப்படங்கள்!

முதல் படம் கைகொடுக்கவில்லை
பிரபலமான திரைப் பின்புலத்தைக் கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் படம் கைகொடுக்கவில்லை.
அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களால் அதிகளவு கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றியை தொடர்ந்து பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து ரஜினி முருகனில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்

முன்னணி கதாநாயகியாக
கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி முருகன் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இந்த நிலையில் விக்ரம், விஜய்,சூர்யா என தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இப்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

மகாநடி
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டிற்கு அங்கும் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து வருகிறார்.

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு
அந்த வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக மகாநடியில் லீட் ரோலில் நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு தேசியவிருது கிடைத்தது. மகாநடி கொடுத்த மிகப்பெரிய உத்வேகத்தை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு பெண் குயின் மற்றும் மிஸ் இந்தியா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.

கட்டிபிடித்து தூங்கும் க்யூட் போட்டோ
அடுத்ததாக வஷி யை மற்றும் குட்லக் சகி போன்ற படங்கள் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்க தயாராகி வருகிறது. இதில் வஷி என்ற படத்தை கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் தயாரித்து வருகிறார். இவ்வாறு பரபரப்பாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தான் செல்லமாக வளர்த்து வரும் நைக் என்ற குட்டி பப்பியை கட்டிபிடித்து தூங்கும் க்யூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.