அஜீத்துக்கு ஜோடியாகும் மாடல் அழகி ஹ்யூமா!!

டெல்லியைச் சேர்ந்தவர் ஹ்யூமா. டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர். சாம்ஸங் மொபைல், நெரோலக் பெயின்ட், பியர்ஸ் சோப், ஐடியா, பஜாஜ் மோட்டார் சைக்கிள் என பல பிரபல பிராண்டுகளுக்கு ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் ஹ்யூமா.
பிரபலமான நாடகக் குழுக்களிலும் பணியாற்றியவர். இந்தியில் இப்போது தயாராகி வரும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கிலும் இவர்தான் நாயகி.
பில்லா 2 படத்தில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது ஹ்யூமா இந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து ஹ்யூமா கூறுகையில், "பில்லா 2 படத்தின் கதையை இயக்குநர் சக்ரி டோலெட்டி சொன்னபோது, எனக்கான வேடத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். அத்தனை அழகான, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அது...", என்றார்.


Click it and Unblock the Notifications











