»   »  இம்புட்டுத் தானா இவ பகுமானம்: 'காலா' ஹீரோயினை பார்த்து சிரிக்கும் நடிகைகள்

இம்புட்டுத் தானா இவ பகுமானம்: 'காலா' ஹீரோயினை பார்த்து சிரிக்கும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காலா படத்தில் ரஜினியின் ஜோடி ஹூமா குரேஷி இல்லை என்பது தெரிந்து பாலிவுட் நடிகைகள் அவரை நக்கல் அடிக்கிறார்களாம்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதாவாக நடித்து வரும் படம் காலா. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் மும்பையில் நடக்கிறது.

காலா படத்தின் ஹீரோயின் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி என்று அறிவிக்கப்பட்டது.

 பாலிவுட்

பாலிவுட்

தலைவர் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹூமா குரேஷியா, இவளுக்கு எப்படி இந்த அதிர்ஷ்டம் அடித்தது என்று அவரை பார்த்து பாலிவுட் நடிகைகள் பலர் வயிறெத்தெரிச்சல் அடைந்தனர்.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி ஹூமா இல்லை மாறாக யாருமே எதிர்பார்க்காத ஈஸ்வரி ராவ். இந்த செய்தி அறிந்த பாலிவுட் நடிகைகள் ஹூமாவை பார்த்து நக்கலாக சிரிக்கிறார்களாம்.

ஹூமா

ஹூமா

காலா படத்தில் ரஜினிக்கு உதவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் ஹூமா. ஹீரோயின் இல்லை என்றால் என்ன, சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பதே கவுரவம் என்று நினைக்கிறாராம் ஹூமா.

 ரசிகர்கள்

ரசிகர்கள்

பாலிவுட்டில் இயக்குனர் அனுராக் கஷ்யப், சல்மான் கானின் தம்பி சொஹைல் கானுடன் தொடர்பு என்று பெயரை கெடுத்துக் கொண்ட ஹூமா தானா ரஜினிக்கு ஜோடியாக கிடைத்தார் என்று தலைவர் ரசிகர்கள் முகம் சுளித்தனர். தற்போது அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

English summary
Actress Huma Qureshi, who is making her Tamil cinema debut with upcoming gangster drama 'Kaala', will not be seen playing superstar Rajinikanth's heroine in the film. Bollywood actresses are reportedly making fun of her for the same reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil