டபுள் எக்ஸ் எல் சைஸில் இருந்த ஹூமா குரேஷியா இது? இப்போ எப்படி மாறிட்டாரு பாருங்க!
மும்பை: ரஜினிகாந்தின் காலா மற்றும் அஜித்தின் வலிமை படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள நிலையில், லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிகை சோனாக்ஷி சின்ஹா மற்றும் நடிகர் மகத் உடன் இணைந்து சமீபத்தில் டபுள் எக்ஸ் எல் படத்தில் நடித்திருந்தார்.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாரே தனது உடல் எடையை டபுள் எக்ஸ் எல் சைஸுக்கு அதிகரித்து இருந்தார்.
அனுஷ்காவுக்கு நேர்ந்த பிரச்சனை; தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையை வலம் வந்துக் கொண்டிருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்த நிலையில், அதில் இருந்து இன்னமும் மீள முடியாமல் பல படங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.
அதே போன்ற ஒரு சிக்கல் வந்து விடுமோ என முதலில் பயந்த நடிகை ஹூமா குரேஷி டபுள் எக்ஸ் எல் படத்திற்காக அந்த ரிஸ்க்கை எடுத்திருந்தார்.
வலிமை ஹீரோயின்: பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் முன்னாள் காதலியாக நடித்திருந்தார் ஹூமா குரேஷி. அதன் பின்னர், கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் மாஸ் ஆக்ஷனில் அசத்தி இருந்தார் ஹூமா குரேஷி.

அஜித் உடன் டூயட் பாடவில்லை என்றாலும், அஜித் உடன் இணைந்து ஆக்ஷனில் கலக்கி எடுத்திருந்தார் ஹூமா குரேஷி. அவருக்கென தனியாக மாஸ் காட்சிகளையும் இயக்குநர் எச். வினோத் வைத்திருந்தார்.
டபுள் எக்ஸ் எல் சைஸ்: வலிமை படத்தை முடித்து விட்டு மீண்டும் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த ஹுமா குரேஷி சத்ரம் ரமணி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டபுள் எக்ஸ் எல் படத்திற்காக தனது உடல் எடையை கணிசமாக அதிகரித்து இருந்தார். சோனாக்ஷி சின்ஹா, மகத் உடன் இணைந்து நடித்த அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

அடேங்கப்பா.. ஆளே மாறிட்டாரே: டபுள் எக்ஸ் எல் சைஸுக்கு சென்ற ஹூமா குரேஷி மீண்டும் பழையபடி கச்சிதமான தோற்றத்துக்கு மாற மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிம்பு போல சிக்கென மாறி லேட்டஸ்ட் போட்டோஷூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பாலிவுட் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











