பாலிவுட் இயக்குநருடன் தாறுமாறாக ரொமான்ஸ் செய்யும் சூப்பர்ஸ்டார் ஹீரோயின்! வலிமையிலும் இவங்கதானா?

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹூமா குரேஷி பாலிவுட் இயக்குநர் முதாசார் ஆசிஸ் உடன் ரொமான்ஸ் செய்து வருகிறார்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்தவர் ஹூமா குரேஷி.

தல அஜித்தின் வலிமை படத்திலும் இவர் தான் அஜித்துக்கு ஜோடி என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷிக்கு 33 வயதாகிறது. டெல்லி பல்கலைக் கழகத்தில் வரலாற்று பிரிவில் பட்டம் பெற்ற ஹூமா குரேஷி, விளம்பர படங்களில் மாடலாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட்டின் ஹீரோயினாக உயர்ந்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பர், டி டே, பட்லாபூர் என பல பிரபலமான பாலிவுட் படங்களில் தனது அசத்தல் நடிப்பை ஹூமா குரேஷி வெளிப்படுத்தியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ஜோடி

சூப்பர்ஸ்டார் ஜோடி

தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தில் ரஜினியின் எக்ஸ் லவ்வராகவும், வில்லியாகவும் நடித்து ஹூமா குரேஷி மிரட்டியிருப்பார். அந்த கண்ணம்மா பாடலில் ரஜினிக்கும் ஹூமா குரேஷிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி வேற லெவல்.

இயக்குநருடன் லவ்

இயக்குநருடன் லவ்

கார்த்திக் ஆர்யான், புமி பெட்னேகர், அனன்யா பாண்டே நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான Pati Patni Aur Who படத்தின் இயக்குநர் முதாசார் ஆசிஸை காதலித்து வருகிறார் ஹூமா குரேஷி. பாலிவுட்டில் தற்போது இந்த புது ஜோடியை பற்றிய பேச்சுக்களும், வதந்திகளும் தான் அதிகமாக பரவி வருகிறது.

போராட்டக் குரல்

போராட்டக் குரல்

குடியுரிமை திருத்த சட்ட மசோதா தொடர்பான போராட்டங்களில் பிரபல பாலிவுட் நடிகர்கள் யாரும் வாய் திறக்காத நிலையில், தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் அது குறித்த கருத்துக்களையும், போராட்டக் குரலையும் ஆழமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் எடுத்து வைத்திருந்தார் ஹூமா குரேஷி.

வலிமை நாயகி

வலிமை நாயகி

போனி கபூர் தயாரிபில் எச். வினோத் இயக்கத்தில் எந்த அப்டேட்டும் வெளியே கசியாமல் மிகவும் ரகசியமாக உருவாகி வரும் வலிமை படத்தில் ஹூமா குரேஷி தான் அஜித்துக்கு ஜோடி என்ற புது தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. முன்னதாக பாலிவுட் நடிகை யமி கவுதம் நடிக்கப் போவதாகவும், நஸ்ரியா நடிக்கப் போவதாகவும் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X