தியேட்டரில் ரசிகர்களுடன் வலிமை படம் பார்த்த ஹுமா குரோஷி… கொண்டாடிய ரசிகர்கள் !

சென்னை : வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார் நடிகை ஹுமா குரோஷி.

2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று திருவிழா கூட்டத்தை பார்க்க முடிந்தது

வலிமை

வலிமை

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன்என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

அவுட்டுக்கு பாலாபிஷேகம்

அவுட்டுக்கு பாலாபிஷேகம்

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆரவாரமாக கொண்டாடினர்.

ரசிகர்களுடன் ஹுமா குரோஷி

ரசிகர்களுடன் ஹுமா குரோஷி

சென்னை ரோகிணி வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கில் இன்று காலை வலிமை படத்தின் நாயகி ஹுமா குரோஷி, அஜித் ரசிகர்களின் படை சூழ வந்தார். ரசிகர்களை அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து நெகிழ்ந்து போன ஹுமா குரோஷி, காரில் இருந்தபடியே வலிமை... வலிமை.. வலிமை என கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ரசிகர்களோடு அமர்ந்த வலிமைப்படுத்தை கண்டுகளித்தார் ஹுமா குரோஷி. இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்

வலிமை படத்திற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் அளித்துள்ள ஒரு சில ரசிகர்கள் கூறுகின்றனர். சில அஜித்தின் தீவிர ரசிகர்கள், சண்டை காட்சிகளிலும், பைக் ரேஸிங் காட்சியிரும் அஜித் டூப்பே இல்லாமல் நடித்துள்ளார். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்று கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X