பலமுறை படுக்கைக்கு அழைத்தார்: இயக்குனர் மீது தெலுங்கு நடிகை புகார்

By Siva

ஹைதராபாத்: 24 பை லவ் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள புதுமுக நடிகை படத்தின் இயக்குனர் வி.எஸ். பாணி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனர் வி.எஸ். பாணி 24 பை லப் என்ற படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து அண்மையில் தான் இசை வெளியீட்டு விழா நடந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் புதுமுக நடிகை நடித்துள்ளார்.

அவர் இயக்குனர் மீது ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, இயக்குனர் பாணி என்னிடம் அவரை பாலியல் ரீதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை கூறுகையில்,

இயக்குனர் பாணி என் நிலைமையை பயன்படுத்தி என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார். என்னை காதலிப்பதாகக் கூறி பலமுறை இன்பத்திற்கு அழைத்துள்ளார் என்றார்.

Hyderabad: Director sexually assaults Telugu actress, case filed

இந்நிலையில் இயக்குனர் ரஹ்மத் நகரில் உள்ள நடிகையின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துள்ளார். வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகையின் கையை பிடித்த இயக்குனர் அவரை மானபங்கப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்த நடிகையை அவர் தாக்கியுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கதினர் வந்து நடிகையை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இயக்குனர் பாணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X