பிரியாணியைப் பார்த்தால் 'டயட்'டை மறந்துவிடும் ஸ்ருதி
சென்னை: ஸ்ருதி ஹாஸன் ஹைதராபாத் பிரியாணியைப் பார்த்தால் டயட்டை மறந்துவிட்டு ஒரு கட்டு கட்டுவாராம்.
ஸ்ருதி ஹாஸன் தெலுங்கு, இந்தி படங்களில் ரொம்பவே பிசியாக இருக்கிறார். தமிழ் படங்களில் எப்பொழுது நடிப்பார் என்று தெரியவில்லை. அப்பா கமலுடன் நடிக்கவும் நேரமில்லை என்று தெரிவித்துவிட்டார்.
அவர் இந்தியில் விலை மாதுவாக நடித்துள்ள டி டே படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

ஹைதராபாத் பிரியாணி
ஸ்ருதிக்கு ஹைதராபாத் பிரியாணி என்றால் கொள்ளைப் பிரியமாம். ஹைதராபாத் பிரியாணியைப் பார்த்தால் டயட்டை மறந்துவிட்டு ஃபுல் கட்டு கட்டுவாராம்.

தமன்னாவும்
தமன்னாவும் ஹைதராபாத் பிரியாணியைப் பார்த்தால் மூக்கு முட்ட சாப்பிடுவாராம்.

நயனும் தான்
நயன்தாராவும் பிரியாணி என்றால் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்.


Click it and Unblock the Notifications











