»   »  காதல்னு வந்துட்டா ஸ்ருதி ஹாஸன் எந்த மாதிரி தெரியுமா?

காதல்னு வந்துட்டா ஸ்ருதி ஹாஸன் எந்த மாதிரி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் என்று வந்துவிட்டால் தான் அந்த காலத்தை சேர்ந்தவள் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் சூர்யாவுடன் சேர்ந்து நடித்துள்ள எஸ் 3 படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கில் அவர் பவன் கல்யாணுடன் கட்டமராயுடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் ராஜ்குமார் ராவுடன் பெஹன் தேரி ஹோகி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி காதல் பற்றி கூறுகையில்,

கமல்

கமல்

நான் என் தந்தை கமலுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் காலத்தில் வாட்ஸ்ஆப் இல்லாததால் தான் பாதி காதல் கதைகள் நடந்தன. நேரில் பார்த்து தான் பேச வேண்டும் என்றார்.

நோக்கியா போன்

நோக்கியா போன்

நோக்கிய போன், எஸ்.எம்.எஸ். எனக்கு நினைவிருக்கிறது. முன்பு லேண்ட்லைன் போன் இருந்தது. பசங்க போன் செய்தால் அம்மா எடுத்துவிடக் கூடாது என்று பயப்படுவோம். இந்த தலைமுறையினருக்கு அது எல்லாம் தெரியாதது வருத்தம் அளிக்கிறது.

காதல்

காதல்

காதலை பொறுத்தவரையில் நான் அந்த காலத்து பெண். எனக்கு காதல் கலந்த காமெடி படங்கள் பிடிக்கும். வீட்டில் இருந்தால் அத்தகைய படங்களையே பார்ப்பேன். ஆனால் இதுவரை நான் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் கூட நடிக்கவில்லை.

பெஹன் ஹோகி தேரி

பெஹன் ஹோகி தேரி

பெஹன் ஹோகி தேரி படத்தின் கதை காமெடியாக இருக்கும். நம்மை பழைய காலத்திற்கு அழைத்துச் செல்லும். தற்போது நம் வாழ்க்கை எவ்வளவு சிக்கலாகிவிட்டது என்பது புரியும். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது.

English summary
Actor Shruti Haasan says she strongly believes in the charm of old-world romance, something which is missing in today’s internet-savvy generation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more