டிவி ரொம்ப கஷ்டம்… ஆனா சந்தோசமா இருக்கேன்: சங்கவி

By Mayura Akilan

சினிமாவை விட டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி செய்வது மிகவும் கஷ்டமானது என்று நடிகை சங்கவி கூறியுள்ளார்.

அமராவதி படத்தில் அஜீத்துடன் நடித்தவர் சங்கவி, அதன் பிறகு விஜய்யுடன் நான்கு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சங்கவி.

சினிமாவில் வாய்ப்பு குறைந்து போனதும் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். இப்போது 'ஆஹா என்ன பொருத்தம்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

தனது சின்னத்திரை அனுபவம் அவர் கூறுவதை படியுங்களேன்

எனக்கு கவலையில்லை

எனக்கு கவலையில்லை

சினிமாவில் நிறைய சாதித்து விட்டேன். இத்தனை வருடத்துக்கு பிறகும் செலிபிரிட்டியாக இருக்கிறதே பெரிய விஷயம். பெரிய ஹீரோக்களுடன் நடித்து விட்டு சின்னத்திரைக்கு வந்தது பற்றி நான் கவலைப்படவே இல்லை.

வாய்ப்பை பயன்படுத்திக்கிறேன்

வாய்ப்பை பயன்படுத்திக்கிறேன்

இன்னும் சொல்லப்போனால் சினிமாவை விட சின்னத்திரையில் சந்தோஷமாகவே இருக்கிறேன். எங்கே வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக்கணுங்றது என்னோட பாலிசி. அதைத்தான் செய்கிறேன்.

உங்க வீட்டுப் பெண்

உங்க வீட்டுப் பெண்

சினிமாவில் நடிகையாகத்தான் இருந்தேன். சின்னத்திரையில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று அவுங்க வீட்டு பொண்ணாயிட்டேன். இந்த அனுபவம் புதுசா இருக்கு.

டிவி நிகழ்ச்சி கஷ்டம்

டிவி நிகழ்ச்சி கஷ்டம்

சினிமாவுல டைரக்டர் கொடுக்கிற வசனத்தை மனப்பாடம் பண்ணி பேசிடலாம் அது ரொம்ப எளிது. ஆனால் டி.வி ஷோல அப்படி பேச முடியாது. எதிர்ல இருக்கிறவர் என்ன பேசுவார்னு நமக்குத் தெரியாது. அவுங்க எது பேசினாலும் அதுக்கு பதில் பேசி நாம நிக்கணும்.

டைமிங் சென்ஸ் முக்கியம்

டைமிங் சென்ஸ் முக்கியம்

இது சவாலான விஷயம் டைமிங் சென்ஸ் இல்லேன்னா டி.வியில பேட்டிகூட கொடுக்க முடியாது. சினிமால மீண்டும் நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை. ஆனால் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம்தான் என்கிறார் சங்கவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X