எனக்கு ரஜினியை விட அஜீத் தான் பிடிக்கும்: டாப்ஸி
சென்னை: தனக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை விட அஜீத் குமார் தான் மிகவும் பிடிக்கும் என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடித்து வருகிறார் டாப்ஸி. அவர் ஆர்யா ஜோடியாக நடித்த ஆரம்பம் படம் தீபாவளிக்கு ரிலீஸாகி வசூலை அள்ளியது.
படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் பேபி பேபி என்று அழைத்துக் கொண்டு அப்பாவி காதலர்களாக நடித்திருப்பார்கள். இந்நிலையில் டாப்ஸி தனக்கு பிடித்த நடிகர் பற்றி தெரிவித்துள்ளார்.

அஜீத் தான்
எனக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை விட அஜீத் குமார் தான் மிகவும் பிடிக்கும் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். டாப்ஸி இப்படி கூறியிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

பார்த்து பார்த்து
தமிழில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருவதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். கவர்ச்சி பாவையாக வந்துவிட்டு செல்வதை விட நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறாராம் டாப்ஸி.

ஆரம்பம் கதாபாத்திரம்
ஆரம்பம் படம் சீரியஸாக இருந்தாலும் தான் வரும் காட்சிகள் சிரிப்பை வரவழைத்துள்ளன என்று டாப்ஸி கூறினார். அந்த கதாபாத்திரம் பற்றி கேட்டதுமே அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

அஜீத்தின் குணம்
தரையை கூட்டுபவராக இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி ஆள் வித்தியாசம் இன்றி ஒரே மாதிரி பழகுவார் அஜீத். தன்னை சுற்றி இருப்பவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் தன்னுடன் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பார். ஆரம்பம் படம் முடிந்ததும் எனது நடிப்பை பாராட்டியதுடன் படத்தில் நடித்ததற்காக நன்றியும் கூறினார். அவருடன் நடித்ததில் பெருமகிழ்ச்சி என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications