Don't Miss!
- News
குமரியில் ரூ.75 லட்ச செலவில்.. அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றி வைத்த.. தேசிய கொடி ஒரே நாளில் கிழிந்தது!
- Finance
என்னது இந்த நிறுவனத்துடைய வயது 234-ஆ..!!
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நான் டான்சர் கிடையாது... ஆடும் போது சந்தோஷமாக இருக்கும்.. நடிகை சாய் பல்லவி!
சென்னை : நடிகை சாய் பல்லவி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி நான் டான்சர் எல்லாம் கிடையாது டான்ஸ் ஆடும் போது சந்தோஷமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.
நயன்தாராவின் 'O2' டீசர் வெளியீடு - ஆக்சிஜனுக்காக ஒரு தாயின் பாசப் போராட்டம்

சிறுசிறு வேடங்களில்
முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சாய்பல்லவிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தாம் தூம் உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ப்ரேமம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார். மலையாள படமாக இருந்தாலும் ப்ரேமம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது

ரசிகர்களின் கனவுக் கன்னியாக
ப்ரேமம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் சாய்பல்லவி நடித்த ஃபிடா பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனால் தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே சாய் பல்லவி மாறினார். இப்பொழுது முழு வீச்சில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் நடிகையாக இருந்தாலும் தமிழில் மாரி 2 மற்றும் என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதும் இன்றும் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்புக்கு இணையாக சாய்பல்லவியின் நடனத்திற்கும் தீவிர ரசிகர்களாக உள்ளனர்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருந்தது. இந்தப் படத்தில் பிற நடிகை நடிகர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தில் சாய்பல்லவி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நான் டான்சர் கிடையாது
சாய்பல்லவியின் நடிப்புக்கு மட்டுமல்லாமல் நடனத்திற்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். ரவுடிபேபி பாடலுக்கு பிறகு மேலும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்க தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ளார் சாய் பல்லவி நான் டான்சர் எல்லாம் கிடையாது. ஆனால் டான்ஸ் ஆடும் போது சந்தோஷமாக இருக்கும் என கூலாக பதில் அளித்துள்ளார்.