நானும் தமிழ் பொண்ணு தான்.. ஊட்டியும் தமிழ்நாடு தானே.. கடுப்பான சாய் பல்லவி!

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கில் மாஸ் காட்டி வருகிறார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், நானும் தமிழ் பொண்ணு தான், ஊட்டியும் தமிழ்நாடு தானே என்று கடுப்பாக பதில் அளித்துள்ளார்.

கோயம்புத்தூரை பூர்விகமாக சாய் பல்லவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, மலையாளத்தில் வெளி வந்த பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். அந்த படத்திற்கு பிறகு இவர் எத்தனையோ படத்தில் நடித்து இருந்தாலும். , மலர் டீச்சரை யாராலும் மறக்க முடியாது.

I am not a Kannada girl I am a Tamil girl Sai Pallavi bold answer

ரௌடி பேபி: பிரேமம் படத்தைத் தொடர்ந்து, தனுஷுடன் சேர்ந்து மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில், தனுஷ்,சாய் பல்லவி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் சூப்பரோ சூப்பர். அந்த பாடலுக்கு பிறகு பலர் அவரை ரௌடி பேபி என, கொஞ்சும் அளவுக்கு, தரமான ஆட்டத்தை போட்டிருந்தார். இன்று வரை இந்த பாடல் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகை சாய் பல்லவி: தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போது, நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க ராவணனனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்கள். மூன்று பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் முதல் பாகம் 835 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

நானும் தமிழ் பொண்ணுதான்: தனது திறமையான நடிப்பால், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சாய் பல்லவி தமிழ் பெண் இல்லை என்று அவர், கன்னடர் என்று இணையத்தில் பரவி வரும் செய்தியால் கடுப்பான சாய் பல்லவி, என்னுடைய சொந்த ஊர் படுகா, ஊட்டி பக்கத்துல கோத்தகிரி பக்கத்துலத்தான் இருக்கு. ஊட்டியும் தமிழ் நாட்டில் தானே இருக்கு அப்போ நானும் தமிழ் பொண்ணு தான் என கூறியுள்ளார். அவரின் இந்த பதிலைப் பார்த்த நெட்டிசன் ஒருவர். எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ... இங்கு பிறப்பினும் அயலான் அயலானே படுகர் மொழியே கன்னட மொழியில் உள்ள கிழை மொழி நீ ஒரு கன்னடர் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X