எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்திற்கு என்னை வைத்து விளம்பரம் தேடுகின்றனர் - இஷாரா
சென்னை: நான் எங்கும் தலைமறைவாக இல்லை என்று சதுரங்க வேட்டை நாயகி இஷாரா கூறியிருக்கிறார்.
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தின் நாயகி இஷாரா தலைமறைவாகி விட்டதாக, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் தொல்லை தங்க முடியவில்லை. அதனால் இப்படத்தில் நடிக்க விருப்பமில்லையென்று நடிகை இஷாரா தெரிவித்திருக்கிறார்.

இஷாரா
சதுரங்க வேட்டை படத்தில் அறிமுகமான இஷாராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க, தற்போது எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி புகழ் அகிலுக்கு ஜோடியாக இஷாரா நடிக்கும் இப்படத்தை கேவின் ஜோசப் இயக்க, டிஎன் 75 கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் தயாரித்து வருகிறார்.

தலைமறைவு

இஷாரா
இந்நிலையில் நடிகை இஷாரா தான் எங்கும் தலைமறைவாக இல்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''இப்படத்தின் இயக்குநர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். படப்பிடிப்பில் அனைவர் முன்னிலையிலும் என்னை வாடி, போடி என்று அழைத்தார். மேலும் ஒரு காட்சியை விளக்கும்போது மிகவும் மோசமாக அதனை சித்தரிப்பார். எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் எனக்கு உதவி செய்யவில்லை.

படப்பிடிப்பு
இந்தப் படத்திற்காக நான் கொடுத்த தேதிகளில் மொத்தமே 2 நாட்கள் தான் படப்பிடிப்பை நடத்தினர்.என்னுடைய தேதிகளை வீணடித்து விட்டு இப்போது படப்பிடிப்பிற்கு வரச்சொல்கிறார்கள். இந்தப்படம் தவிர மேலும் 4 படங்களில் நான் நடித்து வருகிறேன். மற்ற படங்களின் இயக்குநர்கள் இதுபோல நடந்து கொள்ளவில்லை.

விளம்பரம்
இந்தப் படத்துக்கு விளம்பரம் தேட என்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் படத்தினால் என்னுடைய பெயர் பாழாகி விட்டது. சொல்லப்போனால் இதுவரை நான் மகளிர் பிரிவில் புகார் கொடுக்கவில்லை. இதற்காக அவர்கள் தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கேவின்
இப்படத்தின் இயக்குநர் கேவின் '' நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டினார். நானும் சட்டரீதியாக இப்பிரச்சினையை எதிர்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











